29.9 C
Chennai
Tuesday, Oct 1, 2024
Aswagantha
மருத்துவ குறிப்பு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அஸ்வகந்தா தேநீர்

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா போன்ற கொடிய வைரஸ்கள், நோய் தொற்றுகளிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. அதனால் பலரும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட பொருட்களை தேடிப்பிடித்து உபயோகப்படுத்த தொடங்கிவிட்டார்கள். அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு பூஸ்டராக செயல்படும் தன்மை கொண்டது. அஸ்வகந்தா செடி முழுவதுமே மருத்துவப் பயன்கள் கொண்டது. வேர் மற்றும் தூள் வடிவில் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வலுப்படுத்தவும் அஸ்வகந்தாவை தேநீராக தயாரித்து பருகலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் உதவியாக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். ரத்தசோகை பிரச்சினையில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். பெண்களின் கருத்தரிப்புக்கும் நன்மை பயக்கும்.

அஸ்வகந்தா தேநீரை எளிதாக தயாரித்து பருகலாம்.

அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.

கொதிக்க தொடங்கியதும் ஒன்று அல்லது இரண்டு அஸ்வகந்தா வேர் துண்டுகளை போட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.

அல்லது ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா தூளை போட்டு கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும் கீழே இறக்கவும்.

அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து வடிகட்டி பருகலாம்.

இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.

அஸ்வகந்தா:இது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும். இது தவிர, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.

எலுமிச்சை:இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

தேன்:இதிலும் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கூறுகள் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

Related posts

உங்களுக்கு இரவு நேரத்தில் இருமல் வாட்டி எடுக்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தைராய்டு புற்றுநோயைத் தவிர்ப்போம்!

nathan

மலச்சிக்கல் தீர்க்கும் கடுக்காய்ப் பொடி

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு அறிகுறிகள் என்ன?

nathan

விபரீத விளையாட்டு ஆபத்தை ஏற்படுத்தும்

nathan

தலை முதல் கால் வரை அனைவரும் கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டிய உடல்நல பரிசோதனைகள்!!!

nathan

மூட்டுவலிக்கு முக்கிய பயன்தரும் நொச்சி இலை

nathan

பாடாய் படுத்தும் ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் தெரியுமா!!

nathan

ஆயுள் முழுவதும் தைராய்ட் மாத்திரை சாப்பிட தேவையில்லை -தெரிந்துகொள்வோமா?

nathan