தேவையான பொருட்கள் :
நெத்திலி மீன் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளிப்பழம் – ஐந்து
புளி – ஒரு எலுமிச்சை அளவு
தேங்காய் அரைத்தது – அரை கப்
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அகலமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வதங்கியதும் கனிந்த தக்காளிப் பழத்தை பிழிந்து விடவும். பின்னர் நன்றாக கிரேவியாகும் வரை வதக்கவேண்டும்.
* இந்த கலவையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தனியா தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும் மசாலா வாடை போனதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.
* புளி கொதித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்றாக கொதித்த உடன் ஸ்டவ்வை மிதமாக வைத்து மீனை போடவும். 5 நிமிடம் கழித்து ஸ்டவ்வை நிறுத்திவிடவும்.
* கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான நெத்திலி மீன் கிரேவி ரெடி.
* இந்த குழம்பிற்கு கடைசியில்தான் மீனைப் போடவும் இல்லையென்றால் கரைந்து விடும். அதேபோல் புளி தேவையெனில் சேர்க்கவும். இல்லையெனில் கூடுதலாக ஒரு தக்காளிப் பழம் சேர்த்தால் போதுமானது.