26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024

நீங்களே பாருங்க.! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ் சாக்‌ஷி அகர்வால்!

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான சாக்ஷி அகர்வால் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்
ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இவர் திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.Tamil News Sakshi Agarwal request to fans
உடற்பயிற்சி செய்யும் சாக்‌ஷி அகர்வால்
தற்போது படப்பிடிப்பு இல்லாததால் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் சொல்லி வருகிறார்கள். ஆனால் சாக்ஷி அகர்வால் தினமும் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் ரசிகர்கள் பலரும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும் அறிவுரை சொல்லி வருகிறார். உடற்பயிற்சி செய்தால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.