பெண்கள் வயது வந்தது முதல், சுமார் 50 வயது வரை உடன் பயணிக்கும் ஒன்றாக இருக்கிறது நாப்கின். ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார்.
நாப்கின் எப்படி தயாரிக்கப்படுகிறது?
பொதுவாகவே, நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்பட்டவையாகவே இருக்கும் என நாம் நினைக்கலாம். ஆனால், உண்மை நிலவரம் வேறுமாதிரியாக இருக்கிறது.
அனைத்துவகை நாப்கின்களும் பருத்தியால் தயாரிப்பதில்லை என்ற உண்மை பலருக்கும் தெரியாது.
உற்பத்தி செலவை குறைப்பதற்காக, நாப்கின் தயாரிப்பு நிறுவனங்கள், நாப்கின்களை மீள் சுழற்சி (ரீசைக்கிள்) செய்யப்படும் காகிதங்களை பயன்படுத்துகின்றன.
மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களையே மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. நாப்கின் தயாரிப்பில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
நாப்கினின் முதல் லேயர் நெகிழியால் (பிளாஸ்டிக்) தயாரானது. 2-வது லேயர் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவான ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ காகிதத்தால் தயாரிக்கப்படுகிறது.
3-வது லேயர் ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஜெல்லாலும், 4-வது லேயர் லீக் ஆகாமல் இருப்பதற்கான நெகிழி லேயராக வைத்து நாப்கின் தயாரிக்கப்படுகிறது.
இந்தவகை நாப்கின்களை உபயோகப்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புகள்:
நாப்கின் தயாரிக்க டயாக்ஸின் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தும்போது, கர்ப்பப்பை பாதிப்பு, பெண்களின் நோய் தடுப்பாற்றல் குறைவு, கருமுட்டை உற்பத்தி திறன் பாதிப்பு ஏற்படுகிறது.
விளம்பரங்களை பார்த்து ஏமாறாதீங்க..
வேலைக்கு செல்லும் பெண்கள் தற்போதைய காலகட்டங்களில் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை வைத்து நாப்கின் விளம்பரங்கள் பெண்களை ஈர்க்கும் விதமான விளம்பரங்கள் செய்கின்றனர்.
அந்த விளம்பரங்களில், ‘அல்ட்ரா தின்’, எக்ஸ்ட்ரா லாங்’, ‘லாங் நைட்’ என வாசகம் போட்டு மக்களை நம்பவைக்கின்றனர்.
கவனித்து பின்பற்ற வேண்டியவை:
நாப்கினின் என்னென்ன வகையான மூலப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
டாயக்ஸின் என்ற வேதிப்பொருள் இல்லாத, அன்ப்ளீச்சிங் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எந்தவிதமான நாப்கின்களை பயன்படுத்தினாலும், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை அவசியம் மாற்ற வேண்டும்.
நாப்கினை மாற்றும் பொழுது சுத்தமாக கையைக் கழுவியபின் மாற்ற வேண்டும். நாப்கினை ஈரப்பதம் உள்ள கழிவறைகளிலேயே வைக்க வேண்டாம்.
முக்கியமாக வாசனை நிரம்பிய நாப்கினை பயன்படுத்தவே வேண்டாம்.
பயன்படுத்திய நாப்கினை கழிவறையில் போடாமல், முறையாக காகித்தாளில் சுருட்டி உடனடியாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
விழிப்புணர்வு:
பெற்றோர்கள் மற்றும் பெண்கள் கடைகளில் சென்று நாப்கின்களை வாங்கும்போது கூச்சப்பட வேண்டாம். ஏனெனில், அது உங்கள் உடல்நலத்துடன் தொடர்புடையது.
நாப்கின் பயன்படுத்துதல் குறித்து பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.