24.2 C
Chennai
Thursday, Dec 19, 2024
sXGSKEv1ge
Other News

த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு -மன்சூர் அலிகான்..

நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, த்ரிஷா ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் கடந்த நவம்பர் 11ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து லியோ படத்தில் நாயகி த்ரிஷாவுடன் காட்சி இல்லை என கூறி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு நடிகைகள் த்ரிஷா, மாளவிகா மோகனன், குஷ்பு, நடிகர்கள் சிரஞ்சீவி, லோகேஷ் கனகராஜ், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே, தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின், சென்னை ஆயுர்ரம்முட் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். நவம்பர் 24ஆம் தேதி, நடிகை த்ரிஷாவைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதற்கு த்ரிஷாவும், “தவறு செய்வது மனிதம், ஆனால் மன்னிப்பது கடவுள்” என்று பதிலளித்துள்ளார். இத்துடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது போல் இருந்தது.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, த்ரிஷா ஆகியோர் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடரப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `நாளை குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோரை அவதூறு, இழப்பீடு, கிரிமினல் மற்றும் சிவில் நடவடிக்கை என அனைத்து பிரிவுகளிலும் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வேன்.

நவம்பர் 19, 2023 அன்று, நவம்பர் 11, 2023 அன்று எனது செய்தியாளர் சந்திப்பின் “உண்மை வீடியோ” வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, த்ரிஷாவை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் எனது பேச்சை சில விஷமிகள் முன்னும் பின்னும் திருத்தியுள்ளனர். மேலும் ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன். விவகாரத்தை மன்சூர் அலிகான் மீண்டும் கிளப்பியுள்ளார் என்பது பலரின் கருத்து.

Related posts

திருமணத்திற்கு பின் எலும்பும் தோலுமான நடிகை.. கவலையில் ரசிகர்கள்..

nathan

கணவர் தங்கையின் பிள்ளைகளுடன் நயன்தாரா..

nathan

சிவப்பு சந்தன தூள் நன்மைகள் !

nathan

ரூ.32 லட்சம் கோடி சொத்து… 800 ஆண்டுகளுக்கு முந்தைய ‘தங்க’ ராஜா!

nathan

மணிரத்தினம் வீட்டின் தீபாவளி விருந்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

nathan

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பும் இந்தியாவுக்கு விற்பனை!

nathan

‘இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராமம்’ -மாறியது எப்படி?

nathan

கோடீஸ்வரர் ஆன தாய்லாந்து மீனவர்! ‘திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மதிப்பா?’

nathan

1,700 அறைகள் கொண்ட அரண்மனை 5,000 சொகுசு கார்கள்,

nathan