இந்தப் பயிற்சிகளை செய்வதற்கு முன்பு, வார்ம்அப் பயிற்சிகள் செய்ய வேண்டும். பயிற்சி முடித்த பிறகு, கூல்டவுன் பயிற்சிகள் செய்ய வேண்டும். பயிற்சி முறைகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று பயிற்சிகள் செய்வது நல்லது.
மாடிஃபைடு புஷ் அப்ஸ் (Modified push ups) :
தரையில் முட்டிபோட்டு, கைகள் நேராகத் தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். பாதங்களை சற்று தூக்கி, ஒரு பாதத்தின் மேல் மற்றொரு பாதம் வைத்து, முழு உடலையும் தரைப் பகுதி வரை இறக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது. பின்னர், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல 15 முறை செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்தும் கொள்ளலாம். பெண்கள் ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. ஆனால் அவர்களால் முடிந்த அளவில் செய்யலாம். இந்த பயிற்சியை செய்வதால் நெஞ்சு, மேல் வயிறு, கை பகுதி மற்றும் உள் தசைகள் (கோர் மசில்) உறுதியாகும்.