28.2 C
Chennai
Sunday, Sep 29, 2024
oRtv4Yz
சரும பராமரிப்பு

தோல் சுருக்கத்தை போக்கும் உருளைக்கிழங்கு

வெயிலில் அதிக நேரம் செல்வதால் தோல் கருமையாகிறது. தூசுகள் வியர்வையில் படிவதால் தோல் கருமை நிறம் ஆகிறது. தோலில் சுருக்கம், கண்களில் கருவளையம் ஏற்படுகிறது. நலம்தரும் நாட்டு மருத்துவத்தில் இப்பிரச்னைகளுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம். சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தி தோல் சுருக்கம், கருமை நிறத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். சோற்றுக் கற்றாழையில் உள்ளிருக்கும் சதையில் இருந்து சாறு எடுத்து தோல் சுருக்கம் உள்ள இடத்தில் பூசுவதால் சுருக்கம், கருமை நிறம் மாறும். சோற்றுக் கற்றாழை முதுமையை போக்கும் உன்னதமான மருந்தாகிறது.

பூஞ்சை காளான்களை போக்க கூடியது, கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பலம் தரக்கூடியது. ஊட்டசத்துக்களை உள்ளடக்கியது. குளிர்ச்சி தரக்கூடியது. தோலில் ஏற்படும் புற்றை போக்க கூடியது. ஆவாரம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். ஆவாரம் பூ பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும். தோலில் சுமார் 15 நிமிடங்களில் பூசி வைத்திருந்தால் தோல் சுருக்கம், கருமை நிறம் மாறி பழைய நிலைக்கு வரும். ஆவாரம் பூவை தேனீராக்கி குடிப்பதன் மூலம் தோல் ஆரோக்கியம் பெறும். ஆவாரம் பூ ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். வியர்வை நாற்றத்தை போக்கும்.

உடலுக்கு நல்ல வண்ணத்தை கொடுக்க கூடியது. மஞ்சள் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. தக்காளியை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். சிறிது அதிமதுர பொடியுடன், தக்காளி பசை சேர்த்து நன்றாக கலந்து பூசிவர தோல் சுருக்கம், கருமைநிறம் மாறும். தக்காளி வைட்டமின் சி சத்து கொண்டது. மருந்துவ குணங்களை கொண்ட இது புத்துணர்வு தரக்கூடியது. முதுமையை போக்கும் தன்மை கொண்டது. தோல் ஆரோக்கியம் பெறுகிறது. உருளைக் கிழங்கை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். உருளைக் கிழங்கை சுத்தப்படுத்தி பச்சையாக அரைத்து எடுக்கவும்.

இந்த பசையுடன் தேன் சேர்த்து கலந்து பூசி வர சுருக்கம், கருமை நிறம் மாறும். சிறுசிறு தீக்காயங்களுக்கு மருந்தாக விளங்குகிறது. உருளைக் கிழங்கு ஊட்டசத்துக்கள் மிகுந்தது. புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நச்சுக்களை வெளியேற்றும் அற்புதமான மருந்தாகிறது. புண்களை ஆற்றக்கூடியது. பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது. குளிர்ந்த தன்மை கொண்டது. தேன் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. அக்கி புண்களை ஆற்றும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். கொப்புளங்களை கொண்ட அக்கி புண்களால் அரிப்பு, வலி ஏற்படும். இது நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடியது. பருப்பு கீரையை நன்றாக அரைத்து அக்கி புண்கள் மீது பூசுவது, சாப்பிடுவதன் மூலம் அக்கி புண்கள் சரியாகும். எரிச்சல், வலி குணமாகும். oRtv4Yz

Related posts

குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களை வயதானவர்கள் போல காட்டும் கைகளில் உள்ள சுருக்கங்களை எளிதில் மறைய செய்யலாம் தெரியுமா!

nathan

எண்ணெய் சருமத்திற்கான இயற்கை டோனர்கள் oil skin care tips in tamil

nathan

உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும் போங்க!

nathan

கேரளத்து பெண்களின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

கற்றாழை ஜெல் எப்படி சரும அழகை அதிகரிக்க உதவுகிறது?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்திய பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த பொருட்கள்தான்…!

nathan

கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க இத டிரை பண்ணுங்க…

nathan

இவ்வாறான காரணங்களினால் தான் முகம் முதுமைத் தோற்றத்தை அடைகின்றது!…

nathan