தேவையான பொருட்கள்:
* தோசை மாவு – 2 கப்
* க்ரீன் சட்னி – 2 டேபிள் ஸ்பூன்
* குடைமிளகாய் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா பொடி – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* சீஸ் – 1/4 கப்
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* வெண்ணெய் – டோஸ்ட் செய்வதற்கு தேவையான அளவு
செய்முறறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின்பு குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஊத்தாப்பம் போன்று சிறு தோசையை சற்று தடிமனாக விட்டு, எண்ணெய் ஊற்ற வேண்டும்.
Dosa Sandwich Recipe In Tamil
* பின் தோசையின் மேல் பகுதி வெந்ததும் அதைத் திருப்பிப் போடாமல், அப்படியே எடுக்க வேண்டும். இப்படி 4 தோசைகளை சுட்டு கொள்ள வேண்டும்.
* அடுத்து க்ரீன் சட்னிக்கு மிக்சர் ஜாரில் 1 கப் கொத்தமல்லிக்கு, 1/2 கப் புதினா, 2 பச்சை மிளகாய், 1/2 இன்ச் இஞ்சி, 1 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் சாட் மசாலா பவுடர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து இறக்கி, அதில் ஒரு எலுமிச்சையின் சாற்றினை ஊற்றி கிளறினால், க்ரீன் சட்னி தயார்.
* பின்னர் ஒரு தோசையை எடுத்து, அதன் மேல் சிறிது க்ரீன் சட்னியை தடவி, பின் வதக்கி வைத்துள்ள குடைமிளகாயை வைத்து, அதன் மேல் துருவிய சீஸை தூவ வேண்டும். பின் அதன் மேல் மற்றொரு தோசையை வைக்க வேண்டும்.
* அடுத்து சாண்ட்விச் மேக்கர் அல்லது தோசைக் கல்லில், தயாரித்த சாண்ட்விச்சை வைத்து, வெண்ணெய் தடவி நன்கு பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து எடுத்து, இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும். இதேப் போல் அடுத்த செட் தோசைகளையும் செய்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான தோசை சாண்ட்விச் தயார்.