உடல் எடை அதிகரிப்பு மற்றும் குறைவு என்பது படிப்படியாக தான் ஏற்படும். அப்படி இருக்கையில், ஒருவரின் தொப்பை ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதை கண்டுபிடிக்க உதவும் சில அறிகுறிகள் இதோ,
தொப்பை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் என்ன?
சிறிய வேலை செய்யும் போது கூட அதிக வேலைகளை செய்து முடித்ததை போல அடிக்கடி உடல் சோர்வு நிலை ஏற்படும். இது எடை அதிகரிக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி.
அடிக்கடி பசி எடுப்பதால், ஏதாவது நொறுக்கு தீனி அல்லது தின்பண்டங்களை சாப்பிட தோன்றும். ஆனால் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி கட்டுப்படாமல் இருக்கும். இது உடல் பருமன் அதிகரிப்பதற்கான இரண்டாவது அறிகுறி.
உடலில் திடீரென்று ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்தல் மற்றும் ரத்தக்கொதிப்பு பிரச்சனைகள் ஏற்பட்டால், அது அது உடல் எடை அதிகரிப்பதற்கான சரியான அறிகுறி.
உடல் எடையை விட இடுப்பின் சுற்றளவை எளிதில் கவனிக்க முடியும். எனவே உங்கள் இடுப்பின் சுற்றளவு அதிகமாக உள்ளதை போன்று தெரிந்தால், அது உடல் எடை அதிகரிப்பிற்கான அறிகுறி.
கால் மூட்டுகள் மற்றும் முதுகு எவ்வித காரணமின்றி, அடிக்கடி வலி ஏற்பட்டால், அது உடல் எடை அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
சிறிது தூரம் நடக்கும் போது அல்லது சில படிக்கட்டுகள் எறி, இறங்கும் போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், அது உடல் பருமன் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
இரவில் அதிகமாக குறட்டை பிரச்சனை ஏற்பட்டால், அது உங்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது என்று நினைவூட்டும் அறிகுறியாகும்.
சாதாரணமாக தோலின் இறுக்கம் குறைந்து, சதைகள் தொங்க ஆரம்பிக்கும். இது போன்று சதைப்பிடிப்புகளில் இறுக்கம் குறைவது, உடல் எடை அதிகரிக்கிறது என்பதற்கான முக்கிய அறிகுறி.
கால் பாதங்களில் எவ்வித காரணமின்றி, வெடிப்புகள் தோன்றினாலே, உங்கள் உடல் பருமன் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
Related posts
Click to comment