சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள் ஆனால் கால் தொடைப்பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும். இவர்கள் இந்த பயிற்சியை தினமும் தொடர்நது 20 நிமிடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
கால் பாத வலி, முட்டி வலி உள்ளவர்களுக்கும் இந்த பயிற்சி நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் வலது காலை நேராகவும் தரையில் ஊன்றியபடியும், இடது காலை சற்று பின்புறமாக (படம் 1ல் உள்ளபடி) 1 அடி தள்ளி வைக்கவும்.
பின்னர் மெதுவாக இடது காலை பின்புறமாக தூக்கி நேராக நீட்டவும். அப்போது இடது கை உடலோடு ஒட்டியபடி காலை தொட்டபடி (படம் 2ல் உள்ளபடி)இருக்க வேண்டும். வலது கையை முன்புறமாக நீட்டவும். இப்போது இடது காலும், வலது கையும் நேராக இருக்க வேண்டும்.
வளைக்க கூடாது. இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இதே போல் கால்களை மாற்றி இடது பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு காலுக்கும் 15 முதல் 20 முறை செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் ஒரு காலில் நின்று கொண்டு செய்வது சற்று கடினமாக இருக்கும். அப்போது சுவற்றை பிடித்து கொண்டு செய்யலாம். நன்கு பழகிய பின்னர் நேரடியாக இந்த பயிற்சியை செய்யலாம்.