26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
Coconut mask
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும்

சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய தேங்காய் எண்ணெயை நாம் காலங்காலமாக பயன்படுத்திவருகிறோம். முக்கியமாக கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சருமத்திற்கும் பயன்படுத்துகிறோம்.Coconut mask

முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகிறது. இயற்கையான தேங்காய் எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது.

தினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும். இதற்காக நீங்களே ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம்.

இந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தில் முகப்பரு உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று பாக்கலாம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
தேயிலை மர எண்ணெய் – 3 துளிகள்
லாவெண்டர் எண்ணெய் – 2 துளிகள்
தேன் – 1 டீஸ்பூன்

மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இல்லையெனில் தேவையில்லை.

முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.

இப்போது உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 3-4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.

Related posts

சரும வகைக்கு ஏற்ப கற்றாழையைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

அழகான கூந்தலுக்கு biotin உணவுகள்

nathan

பாலாஜி மனைவி வெளியிட்ட வீடியோ! நீயெல்லாம் அம்மாவாக இருக்க தகுதியே இல்லை!

nathan

நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தில் மீண்டும் சோகம்!

nathan

முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

nathan

பூக்கள் தரும் புது அழகு!

nathan

பளிச் சென்ற முகத்திற்கு..

nathan

எல்லா வித சருமத்திற்கான பொருத்தமான டிப்ஸ்-உபயோகிச்சு பாருங்க

nathan

முட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு டைரியில் இடம் பெறட்டும்:

nathan