27.8 C
Chennai
Friday, Oct 18, 2024
safe im
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை திட்டுக்களை ஈஸியாக போக்க கை கண்ட நாட்டு மருந்து இதுதாங்க..!

என்னதான் நம் மனம் அழகாக இருந்தாலும் வெளியில் தெரியும் தோற்றமும் அழகாக இருந்தால்தானே கொஞ்சம் பார்வைக்கு லுக்காக இருப்போம்.

சிலருக்கு சருமத்தின் வெண் திட்டுகள் கை, கால், முகம், பாதம் என இருக்கும். நம் சரும நிறத்தை கொடுக்கும் மெலனினை உற்பத்தி செய்யும் சரும செல்கள் முறையாக செயல்படாமல் போகும் போது தான் வெண் திட்டுகள் உருவாகும். அப்படி சரும செல்லில் மெலானின் நிறமி இல்லாமல் ஆகும் போது சரும செல இறக்கும். இது நம் சருமத்தில் வெள்ளைதிட்டாக படியும்.

இன்னும் சிலருக்கு தைராய்டு, பிபி, வைட்டமின் 12 குறைபாடு, சூரியக்கதிர் சருமத்தை தாக்குவதாலும் இந்நோய் வரும். இதை சில இயற்கை உத்திகளின் மூலமே தீர்க்கலாம்.

அதாவது தயிருடன் மஞ்சள் தூள் கலந்து வெந்திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவி அவை நன்கு காய்ந்த பிறகு வேப்பிலை தண்ணீரால் கழுவ வேண்டும். அப்படிச் செய்தால் வெண் திட்டுகள் சீக்கிரம் போய்விடும், இதேபோல் ஒரு பவுளில் 2 டேபிள் ஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் சந்தனப்பவுடர், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் அரிசி பவுடர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து வெண் திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும், இது நன்றாக காய்ந்ததும் குளிர் நீரால் கழுவ வேண்டும். இதை தினசரி இருமுறை செய்தாலும் வெண் திட்டு போய்விடும்.

துளசியின் இலைகளை நன்றாக பேஸ்ட் செய்து இரவு படுக்கும் முன் வெண் திட்டு மேல் தடவலாம். தினம் ஒரு ஆப்பிளை தோலோடு சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் வைட்டமின் பி 12 கிடைத்து வெண் திட்டு மறையும். இதேபோல் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வெண் திட்டுகள் உள்ள இடத்தில் தடவி, அது நன்றாககாயவிட்டு வேப்பிலை நீரில் கழுவலாம்.

இதேபோல் வேப்பிலை மற்றும் தேனை ஒருகப் தண்ணீரில் கொஞ்சம் வேப்பிலையைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிந்துவந்தால் சரும பிரச்னை தீரும். இதேபோல் இஞ்சியின் சாறு, கற்றாழை ஜெல் ஆகியவற்றாலும் நல்ல தீர்வை பெறலாம்.

ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறுடன் 5_6 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கெண் திட்டு உள்ள பகுதியில் தடவி அது காய்ந்த பின் வெதுவெதுப்பான தண்ணீரிலும் கழுவலாம். இதையெல்லாம் முயற்சித்துப் பாருங்கள். உங்கள் வெண்மை திட்டுகள் மிக சீக்கிரமே போயிருக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தை பெற்றுக் கொள்ள ஏற்ற வயது எது?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்..!

nathan

உங்களுக்கு இரவு நேரத்தில் இருமல் வாட்டி எடுக்குதா?கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

பெண்களே சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க…

nathan

மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு

nathan

உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! கருவுறுதலுக்கு முன் பெண்கள் எப்படி தங்கள் உடலை தயார் செய்துக் கொள்ள வேண்டும்?

nathan

தெரிஞ்சிக்கங்க…அவசியம் தவிர்க்க வேண்டிய ஆபத்தான 7 பாட்டி வைத்தியங்கள்!!!

nathan

பெண்களுக்கு 10 முதல் 60 வயதிற்கு மேல் வரும் பிரச்சனைகளும் – தீர்வும்

nathan