625.500.560.350.160.300.053.800.900.1 4
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…வெந்தயத்துலயும் இவ்வளவு பக்க விளைவுகளா? அதிகமா சாப்பிட்டால் என்ன நடக்கும்?

பாரம்பரிய உணவில் வெந்தயம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

வெந்தயத்தை உணவில் எடுத்துக் கொள்ளவே கூடாதா என்கிற எண்ணம் உங்களுக்கு வரலாம். இது ஒரு கீரை வகையைச் சார்ந்தது ஆகும்.

இந்த மூலிகையை அதிகமாக பயன்படுத்துவதற்குக் காரணம் இதனுடைய தரமான மருத்துவ பண்பு மற்றும் பலவித உணவு பொருள்களில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

அதில் நிறைய நன்மைகளும் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

  • நீங்கள் அதிகமாக வெந்தயத்தை உட்கொண்டால் உங்களுக்கு இருமல், வயிற்றுப்போக்கு, வாயு பிரச்சனை, வாந்தி உணர்வு, சிறுநீரில் அதிக துர்நாற்றம் என பல பிரச்சினைகள் ஏற்படும்.
  • பாலூட்டும் அம்மாக்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை வயிற்றுப் போக்கு தான்.
  • அப்படி உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஏனென்றால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் நீங்கள் பாலூட்டுவதால் அது பிறந்த குழந்தைகளுக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவே அதை உடனே தடுப்பது நல்லது.
  • வெந்தயத்தின் உள்ளே இருக்கும் கூட்டுப் பொருட்களால் சில பேருக்கு அலர்ஜிகள் ஏற்படலாம். இதன் விளைவாக அவரது உடலில் அல்லது தோலில் சிவப்பாக வீக்கம் ஏற்படலாம். இது பெரும்பாலனோருக்கு ஏற்படுவதில்லை என்றாலும் சிலருக்கு ஏற்படுகிறது.
  • குழந்தைகளுக்கு வெந்தய டீ அதிக அளவில் கொடுக்கப்படுகிறது. இது இயற்கையாகவே குழந்தையின் உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை.
  • இதை தொடர்ந்து கொடுப்பதால் குழந்தைகளின் குடல்கள் வலிமையை இழக்கின்றன இதற்கு பதிலாக வெந்தய இலைகளை மசலாவுடன் சேர்த்து சிறிதளவு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • அது நல்ல மருந்து தான். அதுவும் சிறிதளவு சிறிதளவாக முதலில் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். பின்னர் குழந்தைகள் வளர வளர அதனுடைய அளவை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக் கொடுக்கலாம்.
  • சர்க்கரை நோயுள்ள ஒருவர் சர்க்கரை நோயின் மருந்துகளோடு இந்த வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டால் அவருடைய உடலில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறைகிறது. அதன் காரணத்தால் அவருடைய உடலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம்.
  • நீங்களும் தேவைக்கு அதிக அளவு வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டால், உங்களுக்கு தேவை இல்லாமல் வியர்வைகள் ஏற்படும். அதே சமயத்தில் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது உங்கள் சிறுநீரில் துர்நாற்றம் அதிகமாக வீசும்.

 

நாம் இதுவரை வெந்தயத்தை அதிகமாக மருத்துவப் பயன்கள் இருக்கின்றன என நினைத்துள்ளோம். ஆனால் எதையும் தேவைக்கு அதிகமாக உடலில் எடுத்துக் கொண்டால் அதுவே பெரும் விளைவை நமது உடலில் ஏற்படுத்துகின்றன என்பதை இக்கட்டுரை மூலம் புரிகிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் “அளவின்றி போனால் அமிர்தமும் நஞ்சு”

Related posts

மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்

nathan

தொற்றினால் வரும் தொல்லை!

nathan

குறைந்த ரத்த அழுத்தம் மாரடைப்பைத் தடுக்கும்: ஆய்வு வெளியீடு

nathan

மது அருந்தும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்

nathan

சிறுநீரக கற்களை போக்க சிறந்த மருத்துவம்!

sangika

தெரிஞ்சிக்கங்க…புத்தாண்டிலிருந்து நோயின்றி வாழ வேண்டுமா?

nathan

கோடையின் வெம்மை உஷ்ண உபாதைகள்… விரட்டும் உபாயங்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க… நச்சகற்றும் பாத சிகிச்சை! இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு சக்தியா?

nathan

கிட்னி கற்களுக்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுறீங்களா? கட்டாயம் இதை படியுங்கள்

nathan