6 156
சரும பராமரிப்பு

தெரிஞ்சிக்கங்க…மஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா?

மஞ்சள் ஆயுர்வேத காலங்களில் இருந்து மாத்திரைகளில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது பல அழகு பொருட்களிலும் சரும பளபளப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதை ஆண்களும் தங்கள் சருமத்திற்கு பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலர் இடையே இருந்து வருகிறது. ஆண்கள் நேரடியாக மஞ்சள் பயன்படுத்தாவிட்டாலும் அவர்க்ளின் சரும நன்மைக்காக மஞ்சள் சோப்புகளைப் பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூள் நிறைய ஆண்டி-ஆக்ஸிடெண்ட்களைக் கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தில் உள்ள கிருமி மற்றும் பாக்டீரியாக்களை நீக்கி சருமத்தை புத்துணர்வு பெறச் செய்கிறது. மஞ்சள் தூள் இயற்கையான ஒன்று மேலும் இது இஞ்சியுடன் தொடர்புடையது. இது குர்குமின் என்னும் பயோஆக்டிவ் கொண்டுள்ளது. இந்த பயோஆக்டிவ் சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சருமப் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உங்கள் சருமத்திற்கு பல நன்மைகளை அளித்து உங்கள் சருமத்தை இயற்கையாக பளபளக்கச் செய்கிறது. மேலும் இது காயங்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது உங்கள் முகங்களில் உள்ள காயங்கள், முகப்பரு வடுக்கள், வறண்ட சருமம் அல்லது தோல் அழற்சி போன்ற சரும பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் மஞ்சள் தூள் உங்கள் சருமத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்க உதவும்.

மஞ்சள் சோப்பு

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்கள் சருமத்தை வடுக்கள், பருக்கள் மற்றும் வறட்சி இன்றி வைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அணியும் ஆடையில் மட்டுமல்ல அவர்கள் சருமமும் அழகாக இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் மேலும் தன்னபிக்கை வரும். இதற்கான சிறந்த வழி ஆண்கள் மஞ்சள் சோப்பு பயன்படுத்தலாம்.

சருமத்திற்கு மஞ்சள்

ஆண்கள் உங்கள் முகங்களில் மஞ்சள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையான வழி மஞ்சள் சோப்புகளை வாங்கி பயன்படுத்தலாம். அல்லது மஞ்சள் தூளை சிறிது தயிர் கலந்து கலவையாக்கி பயன்படுத்தலாம். இந்த கலவையை உங்கள் முகங்களில் ஒரு மாஸ்க் போல போட்டுக் கொள்ளலாம். மஞ்சளுடன் மிக எளிமையாக வீட்டில் உள்ள உட்பொருட்களைக் கொண்டு உங்கள் முகங்களை பளபளக்கச் செய்யலாம்.

முக வெடிப்புகள்

மஞ்சள் சோப்பு பயன்படுத்த விரும்பாதவர்கள் வீட்டில் இருக்கும் போது மஞ்சள் தூள் பயன்படுத்தி உங்கள் சருமத்தை பளபளக்ச் செய்யலாம். மஞ்சள் தூள் சருமத்தில் உள்ள சவ்வு உயிரணுக்களில் ஊடுருவி ஆக்ஸிஜனேற்ற சக்தியை மேன்படுத்தும் பண்பைக் கொண்டுள்ளது.. இதனால் முகத்தில் ஏற்பட்ட வெடிப்புகளுக்கு எளிதில் இயற்கையாக சிகிச்சையளிக்க முடியும் என்று கூறுகின்றனர். அதாவது ஒரு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய், ஒரு தேக்கரண்டியளவு மஞ்சள் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தில் பாதியளவு எடுத்துக் கொண்டு முகத்தில் பிளவுகள் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் விரைவில் குணமாகும். இதை பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.6 156

சோரியாசிஸ் குணப்படுத்துதல்

மஞ்சள் சோப்பு மட்டும் மஞ்சள் தூள் பயன்படுத்த விருப்பம் இல்லாத ஆண்கள் அவர்களின் ஆரோக்கிய நன்மைக்காக மஞ்சளை சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சளின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சோரியாசிஸ் நோயை கட்டுப்படுத்த மற்றும் குணப்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது மஞ்சளை ஒரு துணை பொருளாகவோ அல்லது உணவிலோ சேர்த்துக் கொள்வதன் மூலம் சோரியாசிஸ் நோயின் அறிகுறிகளை குறைக்க முடியும். ஆனால் இதை உணவில் சேர்த்துக் கொள்ளுவதற்கு முன்பு ஒரு தோல் மருத்துவரிடம் சென்று சரியான அளவை தெரிந்துக் கொண்டு பின்னர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வயதான தோற்றம் குறைத்தல்

மஞ்சள், குர்குமின் ஆண்டிமோட்டோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது மற்றும் வயதான அறிகுறிகளை தாமதப்படுத்த உதவுகிறது. மஞ்சள் முகங்களில் உள்ள கருமையான புள்ளிகள், கரு வளையங்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது.

மஞ்சள் பக்க விளைவுகள்

மஞ்சள் என்பது உங்கள் சருமத்தை வெள்ளையாக்குவதற்கும் உங்கள் சருமத்தை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை நீங்கள் உட்பொருளாக உண்ணும் போது சரியான அளவை பார்த்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சளை நீங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது உங்கள் மெட்டாபாலிசத்தை அதிகமாக உறிஞ்சு விடும். இதனால் சரியான அளவு உட்கொள்ளுவது நல்லது. மேலும் மஞ்சளை முகங்களில் தேய்க்கும் போது கழுவிய பின்பு முகங்களில் சிறிது மஞ்சள் நிறம் இருக்க தான் செய்யும். ஆனால் ஏதேனும் அழற்சி அல்லது எரிச்சல் இருந்தால் பயன்படுத்த வேண்டாம். உங்கள் முகங்களில் தேய்ப்பதற்கு முன்பு கைகளில் தேய்த்து முயற்சி செய்து விட்டு பயன்படுத்துங்கள்.

Related posts

ஆர்கானிக் அழகு!

nathan

இளமையைத் தக்க வைத்துக் கொள்ள இத செய்யுங்கள்!…

sangika

வீட்டிலேயே முக அழகை மேருகூட்டலாம் இதை செய்யுங்க தினமும்….

sangika

தினமும் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள்

nathan

உங்களுக்கு சிவந்த சருமம் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்கள் துணை கொடுத்த முத்தத்தால் சருமத்தில் தழும்பு விழுந்துவிட்டதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஐந்தே நாட்களில் முழங்கால் மற்றும் மூட்டு வலியை குணமாக்கும் அற்புத பானம்!

nathan

முகத்திற்கும் மட்டுமல்ல உடலையும் ஸ்கரப் செய்யுங்க

nathan

கேரளத்து பெண்களின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan