625.500.560.350.160.300.053.800.9 13
oth

தெரிஞ்சிக்கங்க…கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் இதை செய்யவே கூடாதாம்

நாடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மீண்டும் வலுவாக போராட தொடங்கி இருக்கிறது.

இதற்கு மத்தியில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியது.

தற்போது கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்களைத் தொடர்ந்து, இணை நோய்களுடன் போராடுகிற 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

ஒவ்வொருவரும் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 28 நாளில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான எந்தவொரு தடுப்பூசி டோஸ் எடுத்துக்கொண்டாலும், கடைசியாக போட்ட தடுப்பூசி டோசுக்கு பின்னர் 28 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய ரத்தமாற்ற கவுன்சில் ஒரு உத்தரவையும் போட்டுள்ளது. இந்த உத்தரவின்படி ரத்த தானம் செய்வோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் 28 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பதாகும். இதன் அர்த்தம், ரத்த தானம் செய்வோர் முதல் தடுப்பூசியை போட்ட பின்னர் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது என்பதாகும்.

இதற்கிடையே மத்திய சுகாதார அமைச்சகம், 28 நாள் இடைவெளியில் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்ற பின்னர் 2 வாரங்கள் கழித்துத்தான் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிற நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும் என தெரிவித்துள்ளது.

Related posts

திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழந்த பெண்ணை நான் திருமணம் செய்யலாமா?

nathan

மாதவிடாய் வர மாத்திரை பெயர்

nathan

ஆண்களின் மன அழுத்தம் விந்தணு உற்பத்தியை பாதிக்குமா?

nathan

ஒயின் சாப்பிடும் முறை

nathan

கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு

nathan

ஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா?

nathan

sex vitamins food tamil :செக்ஸ் வைட்டமின்கள் உணவு

nathan

விந்தணு பற்றாக்குறையை எப்படி அதிகரிப்பது!..

sangika

ஆண்களுக்கு விந்தணு சக்தியைக் கொடுப்பதில் செலினியம் முக்கியம் பங்கு வகிக்கிறது.

nathan