5 drinking 159
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…குடலில் உள்ள கழிவுகளை சுலபமாக வெளியேற்றணுமா? இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க….

உடலில் மிகவும் சென்சிடிவ்வான உறுப்புக்களில் ஒன்று குடல். செரிமான மண்டலத்தின் ஒரு பகுதியான பெருங்குடல் உடலில் உள்ள நச்சுக்கள், கெமிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தும் சேர்மங்களை நீக்குகிறது. இருப்பினும் அதன் குறிப்பிட்ட வேலை காரணமாக, பெருங்குடல் பல நோய்களுக்கு எளிதான இலக்காகும். அதில் புற்றுநோய், வீக்கம் மற்றும் அதிகப்படியான நச்சு தேக்கம் போன்றவை அடங்கும்.

நவீன மருந்துகளின் உதவியால் குடல் நச்சுக்களைக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் குடலை சுத்தமாக்க முடியும் என்றாலும், ஏன் ஆரோக்கியமான பாதையைத் தேர்ந்தெடுத்து, குடலை சுத்தமாக்கும் மற்றும் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு இயற்கைத் தீர்வை ஏன் தேர்வு செய்யக்கூடாது?

அந்த வகையில் அன்னாசி மற்றும் வெள்ளரிக்காய் இரண்டும் குடலில் சில மாயங்களை புரியக்கூடியவை. நற்பதமான மற்றும் பச்சையான காய்கறிகள், பழங்கள் போன்றவை குடலை சுத்தம் செய்வதற்கு தேவையான உட்பொருட்களை வழங்குகின்றன. இந்த உட்பொருட்களில் சில பாலிஃபீனால்கள், இயற்கை சர்க்கரைகள் மலமிளக்கிகள் மற்றும் நார்ச்சத்துக்களாக செயல்படுகின்றன.

அன்னாசியின் நன்மைகள்

அன்னாசி பழத்தில் சோடியம், பொட்டாசியம், குளோரின், சல்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், அயோடின், வைட்டமின்களான ஏ, பி மற்றும் சில போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளன. இதனால் இந்த பழம் ஆர்த்ரிடிஸ், சைனஸ், கார்டியோவாஸ்குலர் நோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பல பிரச்சனைகளைத் தடுக்கக்கூடிய திறன் வாய்ந்தது.

வெள்ளரிக்காயின் நன்மைகள்

வெள்ளரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் வைட்டமின்களான ஏ, பி காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை அதிகம். அதோடு சல்பர், பொட்டாசியம் மற்றும் இயற்கை குளோரின் போன்றவையும் அதிகம் நிறைந்தது. இதனால் இந்த காய் மூட்டு மற்றும் தசை வீக்கம், ஹைப்பர் டென்சன் மற்றும் உடல் வறட்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:

* கற்றாழை இலை – பாதி

* பச்சை அல்லது சிவப்பு ஆப்பிள் – 1

* ஆரஞ்சு – 1 (ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்)

* அன்னாசி – 1 துண்டு

* வெள்ளரிக்காய் – 1/2

தயாரிக்கும் முறை:

* முதலில் வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிளை நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம் கற்றாழையை இரண்டாக வெட்டி, அதில் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பிளெண்டரில், அனைத்துப் பொருட்களையும் போட்டு, ஒரு டம்ளர் நீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் அதில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

எப்போது குடிப்பது நல்லது?

இந்த ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். அதுவும் காலை உணவிற்கு முன் ஒரு டம்ளரும், மதிய உணவிற்கு முன் ஒரு டம்ளரும் குடிக்க வேண்டும்.

அதோடு தினமும் தவறாமல் குறைந்தது 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்தால், உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்வதோடு, உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.3 ingredient

வெள்ளரிக்காய்-அன்னாசி ஜூஸினால் பெறும் இதர நன்மைகள்:

* மனநிலை மேம்படும்

* வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் நீங்கும்

* பிடிப்புக்கள் தடுக்கப்படும்

* எடை இழப்பு

* நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

* கல்லீரல் செயல்பாடு தூண்டப்படும்

* நச்சுக்கள் நீங்கும்

* ஆற்றல் அதிகரிக்கும்

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத மசாலா பொருட்கள்!!!

nathan

ஆண்களிடம் பெண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்களாம்!

nathan

அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இது உங்களுக்கு தான்; 9 காரணங்கள்

nathan

தாய்ப்பால் கட்டிக் கொண்டால் செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்!

nathan

நீங்கள் வலிப்பு நோய் தொடர்பாக கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!

nathan

மூலிகை இல்லம் – 12 பார்வையை கூர்மையாக்கும் ஜூஸ்!

nathan

பித்தப்பை கல் ! அறிகுறிகளை அறிவோம்!

nathan

கண்புரை என்றால் என்ன?

sangika

கர்ப்பம் அடைத்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்,pregnancy tips

nathan