உணவு தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கும் துரிதவகை உணவுமுறை வழிவகுக்கும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
துரிதவகை உணவுகளால் உடல் பருமன்… ஓர் எச்சரிக்கை
தற்போது ‘ரெடிமேடு உணவுகள்’ அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த உணவுகளாலும், துரிதவகை உணவுகளாலும் பெரிய அளவில் ஆரோக்கியக்கேடு ஏற்பட விருப்பதாக ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்திருக்கிறது.
தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து குவிக்கப்படும் ‘பேக்கேஜ்டு’ உணவுகள் குறைந்த ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதுதான் ஆரோக்கியக்கேட்டுக்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்த வகை உணவுகளை உண்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 2030-ம் ஆண்டுவாக்கில் உலக நாடுகளில் மூன்றில் ஒருவர் அதீத உடல் பருமன் நோய்க்கு ஆளாகக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் உயர் ரத்தஅழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள், நீரிழிவு நோய்கள் உள்பட உணவு தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கும் இந்த உணவுமுறை வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
துரித உணவுகளை துரிதமாக விலக்க வேண்டிய நேரம் இது!