தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகளை தாண்டி இனிப்புகள் தான் பெரும்பாலானவர்களின் நினைவுக்கு வரும்.
அதுவும் வீட்டிலேயே செய்த பலகாரங்கள் என்றால் சொல்லவா வேண்டும்.
இந்த பதிவில், மிகவும் ஆரோக்கியமான டேஸ்டியான கேழ்வரகு லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு- ஒரு கப்
பேரீட்சை- ஒரு கப்
முந்திரி- அரை கப்
வேர்க்கடலை- முக்கால் கப்
வெல்லம்- ஒரு கப்
செய்முறை
ஒரு கப் பேரீட்டை பழம், அரை கப் முந்திரி இரண்டையும் 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைக்கவும்.
வெறும் வாணலியில் ஒரு கப் கேழ்வரகு மாவை இரண்டு நிமிடங்கள் வரை நன்றாக வறுத்து ஆறவைக்கவும்.
ஊறவைத்து பேரீட்சை, முந்திரி, மற்றும் முக்கால் கப் வேர்க்கடலையை துருவிய ஒரு கப் வெல்லத்துடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதில் கேழ்வரகு மாவை சேர்த்து மீண்டும் இரண்டு சுழற்றி சுழற்றி இறக்கவும்.
இதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்தால் கேழ்வரகு லட்டு தயார்!!!