23.7 C
Chennai
Wednesday, Dec 18, 2024
4e03e4bada
சரும பராமரிப்பு

திராட்சைகளையும் அழகை மெருகூட்ட பயன்படுத்தலாம்

அளவில் சிறிதாக இருந்தாலும் தன்னுள் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய திராட்சை பழத்தினை எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் அடங்கியிருக்கும் விட்டமின்ஸ்,மினரல்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்களால் உடல்நலத்திற்கு மட்டுமல்ல உங்களின் அழகுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. சிகப்பு,பச்சை,கருப்பு என எல்லாவகை திராட்சைகளையும் இதற்கு பயன்படுத்தலாம்.

அழுக்குகளை நீக்கும் :
திராட்சையில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கிறது. இதனால் சருமத்தை க்ளன்ஸ் செய்திடும். அதிலிருக்கும் அழுக்களை எல்லாம் நீக்கிடும். திராட்சை பழத்தை நான்கைந்து கைகளில் எடுத்து நசுக்கிக் கொள்ளுங்கள் அதன் சாறை அப்படியே தடவலாம். சுமார் 10 நிமிடங்கள் காய்ந்ததும் அதனை கழுவிவிடலாம்.

தோல் சுருக்கம் :
திராட்சையில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இது நம் தோல் சுருங்குவதை தவிர்க்க முடியும். இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள்.

டேன் :
சருமத்தை சூரியக் கதிர்கள் தாக்காமல் பாதுக்காக்க உதவிடும். திராட்சையில் அதிகப்படியான ஃப்ளேவினாய்ட் இருக்கிறது. இதனை ஆன்ட்டி டேன் மாஸ்க்காக பயன்படுத்தலாம். திராட்சை பழத்தில் இருக்கும் ப்ரோந்தோசியனிடின்ஸ் (proanthocyanidins) மற்றும் ரிசர்வேரட்ரோல் (resveratrol)சூரியனலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கும்.
4e03e4bada
பொலிவான சருமம் :
சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதில் திராட்சை முக்கிய பங்காற்றுகிறது. அதில் இருக்கும் ஆல்ஃபா ஹைட்ராஸி ஆசிட் நம் சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவிடும்.

ஆயில் ஸ்கின் :
கருப்பு திராட்சை எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தினருக்கு மிகவும் நல்லது. கருப்பு திராட்சையை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள் அந்த பேஸ்ட்டுடன் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இப்படிச் செய்தால் உங்கள் முகம் ஃபிரஷ்ஷாக இருக்கும்.

ட்ரை ஸ்கின் :
இதே வறண்ட சருமம் இருப்பவர்கள், திராட்சை அரைத்த விழுது, அவகோடா அரைத்த விழுது, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடுங்கள். நன்றாக காய்ந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவி விடலாம். இதனை தொடர்ந்து செய்வதால் உங்களுக்கு மிருதுவான சருமம் கிடைத்திடும்.

ஈரப்பதம் :
திராட்சையில் தண்ணீரும் ஃபைபரும் நிறைந்திருக்கிறது. இதனை சருமத்தில் தடவுவதால் சருமத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால் சருமம் ஆரோக்கியத்துடன் காணப்படும்.

தலைமுடி :
திராட்சையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்களால் தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கும். தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுவதுடன் பொடுகுத்தொல்லையையும் நீக்கிடும்.

Related posts

சிவப்பு சந்தனத்தின் நன்மைகள்

nathan

பெண்களே உங்க அக்குள் கருப்பா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

எண்ணெய் பசை சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி?

nathan

வயசானாலும் இளமையா காட்சியளிக்கனுமா? இந்த மூலிகைகள் பயன்படுத்துங்க!!!

nathan

உங்களுக்கு அழகை அள்ளித் தரும் 6 அற்புத எண்ணெய்கள் !!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்திய மங்கையரின் பின்னணியில் இருக்கும் அழகு இரகசியங்கள்!

nathan

மருதாணியில் அழகும் ஆரோக்கியமும்

nathan

வெயிலால் கருமை நீக்குவதில் எளிமை

nathan

ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan