நமது ஆயுர்வேத முறையில் உடல் நலப் பிரச்சனைகள் அனைத்திற்கும் எளிய முறையில் தீர்வுக் காண நிறைய வழிகள் கூறப்பட்டுள்ளன. மேலும், இவை அனைத்தும் நமது வீட்டு சமையலறை மற்றும் எளிதாக கிடைக்கக் கூடிய மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படக் கூடிய இயற்கை மருந்துகள் ஆகும்.
சளி, காய்ச்சலில் இருந்து உடலில் உண்டாகும் கட்டிகள் வரை அனைத்திற்கும் தீர்வுக் காண ஆயுர்வேத முறைகளில் மருந்துகள் இருக்கின்றன. இந்த வகையில் தேனில் மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து தினமும் இரண்டு வேளையென இரண்டு மாதம் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இனிக் காணலாம்.
தேவையான பொருட்கள்:
ஒரு கப் நீர்
3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
ஒரு சிட்டிகையளவு மிளகுத்தூள்
1 டீஸ்பூன் சுத்தமான தேன்
பயன்பாட்டு முறை:
முதலில் ஒரு கப் நீர் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் மூன்று டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாற்றை நன்கு கலந்த பிறகு, சிட்டிகையளவு மிளகுத்தூளும், ஒரே டீஸ்பூன் தேனும் சேர்த்து நன்கு கலக்குங்கள்.
பயன்பாட்டு முறை:
இந்த ஜூஸை காலை, மாலை என ஒரு நாளுக்கு இரண்டு வேளைகள் வீதம் ஒன்றில் இருந்து இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து தினமும் குடித்து வர வேண்டும்
நன்மைகள்
தேனில் மிளகுத்தூள் கலந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை சீரான முறையில் கரைத்து, உடல் பருமனை குறைக்க முடியும்.
மிளகுத்தூளின் நன்மைகள்
உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க மிளகுத்தூள் ஓர் சிறந்த மூலப்பொருள் ஆகும். இது செரிமானத்தை ஊக்குவிக்கவும், வயிறு சார்ந்த கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
செரிமானம் மட்டுமின்றி, குமட்டல், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கும் மிளகுத்தூள் நல்ல தீர்வளிக்க கூடியது ஆகும்.
எனவே, இந்த ஜூஸ் உடலில் கொழுப்பை கரைக்க மட்டுமின்றி, செரிமான மண்டலத்தின் செயற்திறன் மற்றும் வலிமையை மேம்படுத்தவும் சீரிய முறையில் உதவுகிறது.
தேனின் நன்மைகள்
மேலும் தேனில் இருக்கும் மூலப்பொருட்களான ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய நலனை ஊக்குவிக்கிறது. மேலும், வாயுத்தொல்லை மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தவும் கூட உதவுகிறது.