musore
இனிப்பு வகைகள்

தித்திப்பான மைசூர்பாக்

எவ்வளவு நாள் தான் மைசூர்பாவை கடைகளில் வாங்கி சாப்பிடுவது, இந்த தீபாவளிக்கு மைசூர்பாக் நம்ம வீட்டிலேயே செஞ்சு அசத்திடுவோம்.
தேவையான பொருள்கள் :

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
நெய் – 2 1/2 கப்

செய்முறை :

* கடலை மாவை நன்றாக சலித்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடலை மாவை போட்டு 3 நிமிடம் வரை மிதமாக வாணலியில் வறுத்து தட்டில் கொட்டி வைக்கவும்.

* மிதமான நெருப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.

* மிதமான சூட்டில் சர்க்கரையில் நீர் சேர்த்து பாகு ஆகாமல் கரைக்கவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்த கடலை மாவுடன், கரைந்த சர்க்கரை நீர் கரைசலை சேர்த்து கட்டியாகாமல் நன்றாக கலக்கவும்.

* கடலைமாவு சர்க்கரை கரைசலுடன் கொதிக்க தொடங்கியதும், உருக்கி வைத்த நெய்யை நான்கைந்து முறைகளாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* இறுதியாக எல்லா நெய்யும் சேர்த்த பின் மாவு நன்கு கெட்டியாக கடாயில் ஒட்டாமல் வரும்போது, அதை இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும்.

* தட்டில் கொட்டிய மைசூர்பா கலவையை ஒரு நெய் தடவிய கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விட்டு மேல் பாகத்தை தடவி வழவழப்பாக்கவும்.

* இது நன்கு ஆறிய பின் நமக்கு தேவையான வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.

* தித்திப்பான தீபாவளி ஸ்பெஷல் மைசூர்பாக் ரெடி.musore

Related posts

ப்ரெட் புட்டிங் : செய்முறைகளுடன்…!

nathan

கருப்பட்டி வட்டிலப்பம்/ Jaggery Wattalappam recipe in tamil

nathan

சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி!…

sangika

சுவையான பாதாம் அல்வா

nathan

மினி பாதாம் பர்பி

nathan

பாலக்கீரை குழிப்பணியாரம் செய்வது எப்படி

nathan

தீபாவளி சூப்பரான சோன்பப்டி

nathan

இனிப்பு விரும்பிகளுக்கு பாணிக் கடும்பு (pudding)

nathan

ரவை அல்வா

nathan