தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி-1/4 கிலோ
வெண்ணெய்-1 ஸ்பூன்
கோஸ்-2 கப்
கேரட்-1
குடை மிளகாய்-1
வெங்காயம்-1
வெங்காயதாள்-2
பேபிகார்ன்-4
தக்காளி-1
துளசி இலை-1 கட்டு
பூண்டு-8-10
பச்சை மிளகாய்-15
எண்ணெய்-2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை ஊற வைத்து உருக்கிய வெண்ணெயில் போட்டு வறுக்க வேண்டும். பின் இரு மடங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து சாதம் வெந்ததும் தனியாக எடுத்து கொள்ளவும்.
மேலும் வாணலியில் சிறிது எண்ணெயை சூடாக்கி நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் இஞ்சி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இதில் பொடியாக அரிந்த குடமிளகாய், கோஸ், கேரட், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பேபி கார்னையும் சேர்த்து இறக்குவதற்கு முன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு லேயர் சாதம், ஒரு லேயர் காய்கறிகளை சேர்க்கவும். இவ்வாறு மாற்றி மாற்றி எல்லாவற்றையும் சேர்த்த பின் பாத்திரத்தை குலுக்கி கலக்கவும். இறுதியாக வறுத்த வேர்கடலையை அலங்கரித்து ருசியாக உண்டு மகிழலாம்.