பெண்கள் இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகத்தில் பால் கட்டிக் கொள்ளும். வலியும் ஏற்படும்.
மார்பகத்தில் தாய்ப்பால் கட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான். ஆனால், பலருக்கும் இதனால் வலி ஏற்படும். குழந்தைக்கு சரியாக பால் கொடுக்க முடியாமல் போகும். எனவே இதற்கான வலி இல்லாத வீட்டு வைத்திய முறைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் தாய்ப்பால் கட்டினாலும் அதை சரி செய்து விடலாம்.
மார்பகத்தில் பால் கட்டி இருந்தால், லேசாக வீங்கி இருந்தாலும், விரல்களால் தடவி சரி செய்ய வேண்டும். கனமான மார்பகத்தை மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றி விட வேண்டும்.
இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகத்தில் பால் கட்டிக் கொள்ளும். வலியும் ஏற்படும்.
பால் கட்டாமல் இருக்க மல்லாந்து படுக்காமல், ஒரு பக்கமாக படுக்கவும். ஒரு பக்கமாக படுத்து உறங்கினால் எளிதில் பால் கட்டிக்கொள்ளாது.
கிரீம், மருந்துகள் தடவ கூடாது. குழந்தை பால் குடிக்கும்போது, கெமிக்கல்கள் குழந்தையின் உடலில் சென்று விடும்.
தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளால் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள்.
பெரிய முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து 2 நிமிடம் சுடுநீரில் போட்டு, அது சூடு ஆறிய பின் பிராவில் சொருகி வையுங்கள். தாய்ப்பால் கட்டுவது நிற்கும்.
உருளைக்கிழங்கை இரண்டாக அறிந்து, ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். சில்லென்று ஆன பிறகு, உங்களுக்கு எந்த இடத்தில் தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு உருளைக்கிழங்கை வைத்து மசாஜ் செய்யுங்கள்.
மல்லிகைப்பூவை அரைத்து மார்பகத்தில் எங்கு தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு திக்கான பேக்காக போடலாம். தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும். இதை அடிக்கடி போட்டால் தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிடும். எனவே, தேவையானபோது போடலாம்.
ஐஸ் கட்டியை எடுத்து மார்பகத்தில் மிதமாகத் தேய்த்து ஒத்தடம் கொடுத்தால் தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும்.
சூடான தண்ணீரில் டர்க்கி டவலை நனைத்து, பிழியவும். இளஞ்சூடாக மார்பகங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். அவலை சூடான தண்ணீரில் நனைத்து மார்பகத்தில் கட்டி விட்டாலும் தாய்ப்பால் கட்டி கொள்வது சரியாகும்.
அக்குபஞ்சர் நிபுணரிடம் சென்று நீடில் போட்டுக் கொள்ளலாம். தாய்ப்பால் கட்டிக் கொள்வது சரியாகிவிடும். உள்ளங்கையில், கட்டைவிரலுக்கு கீழே உள்ள பகுதியில் 10 நிமிடங்களுக்கு மிதமாக அழுத்தம் கொடுத்து வந்தாலும் தாய்ப்பால் கட்டுவது சரியாகிவிடும்.
அரிசியை துணியில் முடித்து, தோசை தவாவில் வைத்து சூடேற்றவும். இளஞ்சூடாக மார்பகத்தில் வைத்து மசாஜ் செய்த பிறகு, தாய்ப்பாலை குழந்தைக்கு தரலாம். இதனால் தாய்ப்பால் கட்டி இருப்பதும் சரியாகும். குழந்தைக்கு தேவையான பாலும் சீராக கிடைக்கும்.
குழந்தையின் 1 ½ – 2 வயது வரை தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்தாலே தாய்ப்பால் கட்டிக்கொள்ளாது.-News & image Credit: maalaimalar