பூப்படைந்து சில வருடங்கள் ஆனதும் `ஸ்கேன்’ செய்து பார்க்க வேண்டும். பார்த்தால், சினைப்பையில் கட்டிகள் இருந்தால் தெரிந்து விடும். 30 சதவீதம் பெண்களுக்கு கட்டிகள் இருக்கலாம். ரத்தப்பரிசோதனை மூலம் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான், புரலாக்டின் போன்றவைகளின் தன்மையை ஆராய்ந்து விடலாம்.
ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேனிங் பரிசோதனை மூலம் பாதிப்பை முழுமையாக கண்டறிந்து விடலாம். பி.சி.ஓ.எஸ். குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதால், தொடக்கத்திலே இதன் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை பெறவேண்டும்.
பெரும்பாலான பெண்கள் திருமணமாகி பல வருடங்கள் ஆன பின்பும் தாய்மையடையாமல் இருந்தால் மட்டுமே, பி.சி.ஓ.எஸ். பரிசோதனைக்கு உட்படுகிறார்கள். இந்த நோயை கட்டுப்படுத்த நான்கு விதமான முக்கிய நடவடிக்கைகள் தேவை. அவை:
* அறிகுறிகளை கண்டறிதல்.
* பரிசோதித்து முறையான, முழுமையான சிகிச்சை பெறுதல்.
* சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுதல்.
* உடற்பயிற்சி செய்தல். பெண்கள் விழிப்புடன் இருந்தால் இந்த நோயை தவிர்க்கலாம். வந்தாலும் நவீன சிகிச்சை மூலம் தடுக்கலாம்.
– டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.