25.5 C
Chennai
Tuesday, Dec 17, 2024
image 71

சூப்பர் டிப்ஸ்! மூச்சுத்திணறல் பிரச்சனையை சரிசெய்ய வேண்டுமா? பாட்டி வைத்திய முறைப்படி இந்த கசாயம் செய்து குடித்து பாருங்கள்!

மூச்சுத்திணறல் பிரச்சனையால் இங்கு அவதிப்படுபவர்கள் ஏராளமானோர். அதை ஆரம்ப காலத்தில் கண்டுபிடித்து தடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விடும். இதை தடுக்க இந்த எளிமையான கசாயத்தை செய்து குடித்து பாருங்கள், இந்த பிரச்சனை விரைவில் நின்று விடும்.

யாருக்கெல்லாம் மூச்சுத்திணறல் ஏற்படும்?

  • நம் உடலில் ஏற்படும் அதிக வெப்பநிலை காரணமாக நமக்கு ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுகிறது, தக்க சமயத்தில் ஆக்சிஜன் கிடைக்காத போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, மூச்சுத்திணறல் பிரச்சனை வரும்
  • இதய தொடர்பான நோய்கள் வருவதற்கு முதல் அறிகுறியாக அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
  • இன்னும் சிலருக்கு பதட்டமான சூழ்நிலையில் மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படும்.
  • சிலருக்கு உடலில் நீர்ச்சத்து இல்லாமல் உடல் வறட்சியுடன் இருக்கும். அப்போது செல்களுக்கு தேவையான அளவு நீர் கிடைக்காததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
  • உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படும்.
  • வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது பொது இடங்களில் இருக்கும் தூசுக்கள் மற்றும் அழுக்குகளால் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்படும்.
  • சிலருக்கு அதிக வாசனை உள்ள சென்ட் போன்ற பொருட்களை நுகரும் போது மூச்சுத்திணறல் வரும்.
  • இதற்கு நீங்கள் தூதுவளை பொடியில் கசாயம் செய்து குடிக்கலாம். இந்த தூதுவளை கசாயத்தை எப்படி செய்வது என்பதை இதில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

தூதுவளை பொடி – 1 தேக்கரண்டி

பனங்கல்கண்டு அல்லது பனை வெல்லம் – தேவையான அளவு

செய்முறை :

  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வேண்டும்.
  • நீர் கொதித்தவுடன் அதில் தூதுவளை பொடியை போடவும். பின்பு அதனுடன் சிறிதளவு பனங்கல்கண்டு சேர்த்து நீரை கலக்கி விடவும். இதை நன்கு சுண்ட விடவும்.
  • 1 டம்ளர் ஆகும் வரை நீரை சுண்ட வைத்து, பின்பு இந்த கசாயத்தை இறக்கிக் கொள்ளலாம்.
  • கசாயத்தை சிறிது நேரம் ஆற வைத்து, வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.
  • இந்த கசாயத்தை தினமும் குடித்து வந்தால் மூச்சுத் திணறல் பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கும்.image 71

எப்போது குடிக்கலாம்?

காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூச்சு திணறல் பிரச்சனை சரியாகும்.

இந்த கசாயம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

  • காய்ச்சல், ஜலதோஷம் போன்ற உடல் உபாதைகள் இருந்தால் அவை சரியாகி விடும்.
  • இந்த கசாயத்தை குடித்து வருவதால் நியாபக சக்தி அதிகரிக்கும்.
  • பித்தத்தினால் ஏற்பட்ட வாந்தி, தலைசுற்றல் மற்றும் மயக்கம் சரியாகி விடும்.
  • இந்த பிரச்சனை உள்ளவர்கள் தூதுவளையில் கசாயம் செய்து குடித்து வாருங்கள், உங்களுக்கு நல்ல பயன் கிடைக்கும்.

குறிப்பு : தூதுவளை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.