26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201701161517190279 mutton keema pulao SECVPF
அசைவ வகைகள்

சூப்பரான மட்டன் கீமா புலாவ்

மட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். மட்டன் கீமா புலாவை எப்படி வீட்டில் எளிய முறையில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சூப்பரான மட்டன் கீமா புலாவ்
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 2 கப்
மட்டன் கொத்துக்கறி – 400 கிராம்
தயிர் – 2 கப்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் – 6
ஏலக்காய் – 5
மிளகு – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 1/4 கப்
பிஸ்தா – 1/4 கப்
காய்ந்த திராட்சை – 1/2 கப்
குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டன் கொத்துகறியை சுத்தம் செய்து வைக்கவும்.

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* குக்கரில் நெய் விட்டு சூடானதும் மிளகு, ஏலக்காய், லவங்கம், பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்கறியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் விட்டு கறியை வேக விடவும்.

* பிரஷர் போனதும் குக்கரை திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.

* மட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.

* இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.201701161517190279 mutton keema pulao SECVPF

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பாஸ்தா

nathan

சுவையான மசாலா மீன் ப்ரை

nathan

சூப்பரான கிராமத்து மீன் குழம்பு

nathan

கடாய் காளான் மசாலா செய்வது எவ்வாறு…?

nathan

முட்டை மிளகு மசாலா : செய்முறைகளுடன்…!

nathan

சிக்கன் பிரியாணி

nathan

இறால் சில்லி 65

nathan

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

nathan

தேங்காய்ப் பால்- ஆட்டுக்கால் குழம்பு- செய்வது எப்படி?

nathan