25 bread pizza
சமையல் குறிப்புகள்

சூப்பரான பிரட் பிட்சா

பிட்சா சாப்பிடுவது உடலுக்கு தீமையை விளைவிக்கும். ஆனால் வீட்டில் செய்து சாப்பிடும் உணவுகளால் எவ்வித தீமையும் ஏற்படாது. பலருக்கு பிட்சா எப்படி செய்வதென்று தெரியாது. மேலும் அதை செய்வது கஷ்டம் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த பிட்சாவை பிரட் கொண்டு ஈஸியாக வீட்டிலேயே சாப்பிடலாம்.

இங்கு அந்த பிரட் பிட்சாவை எப்படி வீட்டிலேயே செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

Bread Pizza Recipe
தேவையான பொருட்கள்:

கோதுமை/வெள்ளை பிரட் துண்டுகள் – 3
வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சீஸ் – 3 டேபிள் ஸ்பூள் (துருவியது)
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 சிட்டிகை
சில்லி ப்ளேக்ஸ் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி, பின் வெங்காயத்தை தூவி விட வேண்டும்.

பின்னர் அதன் மேல் குடைமிளகாய், மிளகுத் தூள், சில்லி ப்ளேப்ஸ் தூவி, பின் துருவிய சீஸ் தூவி விட வேண்டும்.

பிறகு மைக்ரோவேவ் ஓவனை 200 டிகிரி செல்சியஸில் சூடேற்றி, பின் அதனுள் பிரட் துண்டுகளை வைத்து, 5-7 நிமிடம் பேக் செய்து வெளியே எடுத்தால், பிரட் பிட்சா ரெடி!!!

குறிப்பு:

மைக்ரோவேவ் ஓவன் இல்லாதவர்கள், பிரட் துண்டுகளை ஆரம்பத்திலேயே நெய் தடவி டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு இதர பொருட்களைக் கொண்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் மேல் பிரட் துண்டுகளை வைத்து, சீஸ் உருகியதும் இதனை இயக்கி விட வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.

Related posts

சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை..

sangika

சுவையான கத்திரிக்காய் ரசவாங்கி

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி ரசம்

nathan

சுவையான மொச்சை பொரியல்

nathan

லெமன் பெப்பர் சிக்கன்

nathan

துர்நாற்றம் வீசும் பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தம் செய்ய டிப்ஸ்

nathan

ஓவன் இல்லாமல் பிட்சா செய்வது எப்படி?

nathan

சுவையான மிளகூட்டல்!…

sangika

சுவையான சத்து நிறைந்த சோள ரவை புட்டு குழந்தைகளுக்கும் நோயாழிகளுக்கும் உகந்தது!…

sangika