28.2 C
Chennai
Monday, Sep 30, 2024
egg appam
சமையல் குறிப்புகள்

சுவையான முட்டை ஆப்பம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 3 கப்

தேங்காய் துருவல் – 2 கப்

உளுந்து – 3 தேக்கரண்டி

வெந்தயம் – 1 தேக்கரண்டி

சமையல் சோடா – 3 சிட்டிகை

உப்பு – சிறிதளவு

முட்டை மசலா

முட்டை – மூன்று

சர்க்கரை – அரை தேக்கரண்டி

மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி

எண்ணெய் – ஐந்து மேசைக்கரண்டி

நெய் – இரண்டு மேசைக்கரண்டி

ஹோட்டல் சுவையில் முட்டை ஆப்பம் செய்வது எப்படி? | Muttai Appam In Tamil

செய்முறை விளக்கம்
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைக்கவும்.

அரிசியுடன், உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்த்து 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும். அதன் பின்னர் நன்கு கழுவி விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து புளிக்க விடவும். ஆப்பத்திற்கு புளித்தால்தான் சாஃப்ட்டாகவும், சாப்பிட நன்றாகவும் இருக்கும்.

ஹோட்டல் சுவையில் முட்டை ஆப்பம் செய்வது எப்படி? | Muttai Appam In Tamil

ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்து விட்டு, ஆப்பக்கடாயில் சிறிது எண்ணெய்த் தடவி, ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேய்த்துவிட்டு மாவைச் சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும்.

அதில் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஒரு குழி கரண்டி எடுத்து மாவின் நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வேக வைத்து சுட்டெடுக்கவும். இப்போது சுவையான முட்டை ஆப்பம் ரெடி.

Related posts

சுவையான தயிர் கொண்டைக்கடலை சப்ஜி

nathan

காலிஃப்ளவர் குருமா!

nathan

சுவையான கேரட் சீஸ் சப்பாத்தி

nathan

சுவையான காளான் குருமா

nathan

தக்காளி குழம்பு

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால்

nathan

சன்னா பட்டர் மசாலா

nathan

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

sangika

ருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை சாதம்

nathan