32.8 C
Chennai
Monday, Sep 30, 2024
pongal puli curry
சமையல் குறிப்புகள்

சுவையான பொங்கல் புளிக் குழம்பு

பொங்கல் தினத்தன்று வெறும் பொங்கல் மட்டும் பிரபலமல்ல. அந்நாளில் கிராமப்புறங்களில் பரங்கிக்காய், அவரை, மொச்சை, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சேர்த்து குழம்பு செய்து சாப்பிடுவார்கள். அதற்கு பொங்கல் புளிக் குழம்பு என்று பெயர். இதனை பொங்கல் குழம்பு என்றும் சொல்வார்கள்.

இங்கு அந்த பொங்கல் புளிக் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த பொங்கல் அன்று செய்து சுவைத்து மகிழுங்கள்.

Pongal Puli Curry Recipe
தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1/2 கப்
அவரைக்காய் – 1/2 கப்
மொச்சை – 1/2 கப்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 1
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2 (நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள்
புளி – 1/4 கப்
வெல்லம் – 1/2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1/4 கப் (வேக வைத்து மசித்தது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

சீரகம் – 1 டீஸ்பூன்
வடகம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் அவரைக்காய், உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் பரங்கிக்காயை சேர்த்து, மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி பரங்கிக்காயை வேக வைக்க வேண்டும்.

அனைத்து காய்கறிகளும் நன்கு வெந்ததும், அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, வெல்லம் சேர்த்து கிளறி, 1/4 கப் புளிச்சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, பின் வேக வைத்துள்ள மொச்சையை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது ஓரளவு கெட்டியானதும், அடுப்பை அணைத்து இறக்கினால், பொங்கல் புளிக் குழம்பு ரெடி!!!

Related posts

காளான் 65

nathan

சுவையான … உளுந்து கஞ்சி

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

nathan

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

sangika

பூரி மசாலா

nathan

பத்தியக் குழம்பு செய்முறை!

nathan

எளிய முறையில் வடகறி ரெசிபி

nathan

ரவா கேசரி

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika