32.8 C
Chennai
Monday, Sep 30, 2024
31 bread chaat
சமையல் குறிப்புகள்

சுவையான பிரட் சாட் ரெசிபி

விடுமுறை நாட்களில் வீட்டில் மாலை வேளையில் நல்ல சுவையான சாட் ரெசிபிக்களை செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரட் சாட் ரெசிபியை செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தவாறு இருக்கும். சரி, இப்போது அந்த பிரட் சாட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பிரட் – 5
கெட்டியான தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 டீஸ்பூன்
சில்லி பவுடர் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய – 1 (பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது)
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
சேவ் – சிறிது

செய்முறை:

முதலில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிரட்டில் முன்னும் பின்னும் நெய் தடவி தோசைக்கல்லில் போட்டு டோஸ் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த பிரட் துண்டுகளை தட்டில் பரப்பி வைத்துக் கொண்டு, அவற்றின் மேல் முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை தூவி விட வேண்டும்.

பின்பு உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா, மல்லி தூள் மற்றும் சீரகப் பொடி தூவி விட வேண்டும்.

பிறகு ஸ்பூன் பயன்படுத்தி தயிரை பிரட் துண்டுகளின் மேல் ஊற்றி, இறுதியில் சேவ் என்னும் மிக்ஸரை தூவி பரிமாறினால், பிரட் சாட் ரெடி!!!

Related posts

சுவையான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

nathan

சுவையான பன்னீர் கட்லெட்….

sangika

சுவையான வெஜிடேபிள் அவல் உப்புமா

nathan

பன்னீர் சீஸ் டோஸ்ட்

nathan

“நீங்க உங்கள் சமையலறையில் (Plastic Cutting Board) பிளாஸ்டிக் கட்டிங் போட் ஐ வைத்து தான் காய்கறிகளை வ…

nathan

சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி!…

sangika

மெத்தி சிக்கன் குழம்பு

nathan

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

sangika

அவலை இவ்வாறும் செய்து சாப்பிடலாம்…..

sangika