15 chapathy noodles
சமையல் குறிப்புகள்

சுவையான சப்பாத்தி நூடுல்ஸ்

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்கலாம். மேலும் இந்த ரெசிபியானது குழந்தைகள் மதிய வேளையில் சாப்பிடுவதற்கும் ஏற்றவாறு இருக்கும்.

அது தான் சப்பாத்தி நூடுல்ஸ். இந்த ரெசிபியானது செய்வது மிகவும் ஈஸி. இங்கு அந்த சப்பாத்தி நூடுல்ஸ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா…!

 

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 4
முட்டைக்கோஸ் – 1/4 கப் (நீளமாக மெல்லியதாக நறுக்கியது)
கேரட் – 2 (நீளமாக மெல்லியதாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1 சிறியது (நீளமாக மெல்லியதாக நறுக்கியது)
பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சப்பாத்தியை கத்தரிக்கோல் பயன்படுத்தி நூடுல்ஸ் போன்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி!!!

Related posts

பாட்டி வைத்தியம்!

nathan

பாலக் டோஃபு கிரேவி ருசி தெரியுமா உங்களுக்கு…..

sangika

5 கிலோ குறைக்கனுமா? இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்!

nathan

சுவையான அரிசி மாவு தேங்காய் ரொட்டி

nathan

சுவையான பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி

nathan

பாலுடன் இந்த இரண்டு பொருளை கலந்து குடித்தால் போதும்! சூப்பர் டிப்ஸ்

nathan

அரிசி மாவுடன் இதைச் சேர்த்தால் கிரிஸ்பி தோசை ரெடி

nathan

சுவையான எலுமிச்சை இடியாப்பம்

nathan

மொஸரெல்லா சீஸ் வீட்டிலேயே செய்வது எப்படி..?

nathan