தேவையான பொருட்கள்
வேக வைத்த சாதம் – 1 கப்
பன்னீர் – 200 கிராம்
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
தாளிக்க :
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை ஸ்பூன்
சீரகம் – சிறிதளவு
பெருங்காய தூள் – சிறிதளவு
செய்முறை :
• ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• பன்னீரை துருவிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
• அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
• வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் சிறிது மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
• வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் துருவிய பன்னீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.
• அடுத்து அதில் வேக வைத்த சாதம், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.
• இப்போது சுவையான சத்தான பன்னீர் சாதம் ரெடி.