இலகுவான முறையில் வீட்டில் இருந்து செய்ய கூடிய சுவையான கோழி கட்லட் செய்வதற்கான முறையை அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
250 முதல் 300 கிராம் கோழி
½ கப் வெங்காயம்
1 நடுத்தர உருளைக்கிழங்கு வேகவைத்தது.
½ கப் வேகவைத்த பட்டாணி (விரும்பினால்)
1 பச்சை மிளகாய்
1 ½ தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
கொத்தமல்லி இலைகள்
1 ½ தேக்கரண்டி கரம் மசாலா
½ கப் அரிசி மாவு அல்லது பிஸ்கட் தூள்
¼ கப் மாவு
3 டீஸ்பூன் உப்பு
தேவையான அளவு உப்பு
செய் முறை
கோழியை நன்றாக வேக வைத்து கொள்ள வேண்டும். வேக வைத்த கோழியை நன்கு அறைத்து கொள்ளவும்.
வெங்காயம், மசித்த கிழங்கு, பச்சை மிளகாய், மசாலா, இஞ்சி பேஸ்ட், உட்பட மிளகாய் தூள், மஞ்சள் மற்றும் கறிவேப்பிலையை கோழியுடன் பிசைந்து கொள்ளவும்.
அதனை உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
அதனை முட்டையில் நணைத்து, பிஸ்கட் தூளில் போட்டு பொறித்து எடுக்கவும்.
பொறித்ததனை அப்படியே பறிமாறலாம்..