04 green capsicum chutney
சட்னி வகைகள்

சுவையான குடைமிளகாய் சட்னி

பொதுவாக குடைமிளகாயை ப்ரைடு ரைஸ் உடன் சேர்த்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இங்கு அந்த குடைமிளகாய் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்னியானது காலை வேளையில் இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.

சரி, இப்போது அந்த குடைமிளகாய் சட்னியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Green Capsicum Chutney
தேவையான பொருட்கள்:

பச்சை குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1 (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 2 பற்கள்
வரமிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
புளி/மாங்காய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – 1 சிறு கொத்து

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, புளி/மாங்காய் தூள், உப்பு, பொட்டுக்கடலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்தால், குடைமிளகாய் சட்னி ரெடி!!!

குறிப்பு:

வேண்டுமானால், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால், சட்னியானது நன்கு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

Related posts

சுவையான இஞ்சி சட்னி!….

sangika

சுவையான தக்காளி சட்னி

nathan

கேரட் – வெந்தயக்கீரை சட்னி

nathan

ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியத்தை தரும் பீர்க்கங்காய் சட்னி

nathan

வல்லாரை துவையல்

nathan

சுவையான கேரட் சட்னி

nathan

ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி -செய்முறை

nathan

சுவையான சத்தான கேரட் சட்னி

nathan