26.6 C
Chennai
Saturday, Dec 28, 2024
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

சுருட்டை முடி பராமரிப்பு எப்படி?

26-5-moisturiserசுருட்டை முடி உடையவர்கள் சுந்தர அழகு மிக்க பாக்கியசாலிகள். அதை சிலர் இயற்கையாக பிறப்பிலேயே பெறுகின்றனர். இன்னும் சில சுருட்டை முடியை  பெருவதற்கு பியூட்டி பார்லர் சென்று, இதை போன்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது. இந்த  முடியை கொண்டு நாம் எந்த வகை அலங்காரத்தையும் செய்ய முடியும். ஆனால் இத்தகைய தலை முடியை வாருவது சிறிது கடினம் தான்.  அதுமட்டுமல்லாமல் அதை சுத்தமாகவும் சிக்கல் இல்லாமலும் பராமரிப்பது மேலும் கடினமான விஷயமாகும்.

இத்தகைய முடியை உடைய பெண்கள், இதை எப்படி முறையாக பராமரிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுவீர்கள். சுருட்டை முடி நேராக  இருக்கும் முடியை காட்டிலும் பராமரிப்பில் அதிகம் கடினமாக இருக்கும். ஆகையால் இதை எப்படி பாதுகாப்பு என்று குறிப்புகளை தற்போது  பார்ப்போம். இந்த குறிப்புகள் தங்கள் முடியை அழகாகவும், அடர்த்தி குறையாமலும் இருக்க உதவும். சுருட்டை முடியை பராமரிக்க உதவும் பொருட்கள்  கடைகளில் அதிகளவில் கிடைக்கின்றன. இதை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு முடியை மேம்படுத்துவது  மிகவும் பாதுகாப்பானதாகும்.

கண்டிஷனர் : படர்ந்து விரியும் கூந்தலை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஆகையால் கண்டிஷனரால் இதை சிறிதளாவு கட்டுப்படுத்த முடியும். குளித்த பின் இதை  போட்டால் சிறந்ததாகும். கடைகளில் கிடைக்கும் கண்டிஷனர் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இதை செய்யலாம். தேன், முட்டை, ஆப்பிள், சீடர் வினிகர் மற்றும் டீ ஆகிய பொருட்களை கொண்டு இதனை செய்ய முடியும்.

சுருள் முடியை சீவுதல் : சுருட்டை முடியை கொண்ட நீங்கள் பெரிய பற்கள் உடைய சீப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். இவை முடியின் சிக்கல்களை எளிதாக அகற்ற  உதவும். முடி உடைவதையும் தடுக்கும். இதனால் முடி கூடிய வரை பாதுகாப்பாக இருக்கும்.

Related posts

கற்றாழை ஜெல்லைக் கொண்டு பொடுகை விரட்டுவது எப்படி?

nathan

உங்களுக்கு முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வராமல் இருக்க

nathan

கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணி

nathan

ஒரு ஹேர் பின் வச்சு சூப்பரா எப்படியெல்லாம் உங்கள் கூந்தலை எப்படி எல்லாம் அழகுபடுத்தலாம்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலை ரொம்ப அரிக்குதா? உடனே அரிப்பை போக்கும் ஒரு துளி சாறு!

nathan

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி ‘பேக்’

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நரைமுடியினை கருமையாக்க கஷ்டப்படுகிறீர்களா?

nathan

வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!

nathan

அழகான கூந்தலுக்கு…

nathan