23.4 C
Chennai
Wednesday, Dec 18, 2024
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

சுருட்டை முடியை பராமரிக்க வழிகள்

ld1058சுருட்டை முடி இருப்பவர்கள் அதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானது. சுருட்டை முடியை எளிதில் பராமரிப்பதற்கு ஒரு சில வழிகள் உள்ளன. அத்தகயை வழிகளை மனதில் கொண்டு தினமும் முடியைப் பராமரித்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகான தோற்றத்தையும் தரும்.

– சுருட்டை முடி உள்ளவர்களது முடி விரைவில் வறட்சியடையும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகப்படியான எண்ணெய் தேய்க்காமல், லேசாக எண்ணெய் தேய்க்க வேண்டும். இல்லாவிட்டால், தலைக்கு குளிக்கும் போது முடிக்கு கெமிக்கல் அதிகம் இல்லாத அல்லது இயற்கை கண்டிஷனர்களை பயன்படுத்தினால், முடி நன்கு மென்மையுடன், பொலிவோடு இருக்கும்.

– தலைக்கு குளித்தப் பின்னர், முடி ஓரளவு ஈரத்துன் இருக்கும் போதே, வேண்டிய ஸ்டைலில் முடியை சீவினால், முடியானது அடங்கியிருப்பதோடு, வறட்சியின்றி முடியும் மென்மையாக இருக்கும்.

– விலை குறைவாக உள்ளது என்று முடிக்கு கண்ட கண்ட அழகுப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. இதில் உள்ள அதிகளவு கெமிக்கல்கள் முடிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே முடியின் மென்மை மற்றும் பொலிவை இழக்காமல் இருப்பதற்கு, நல்ல தரமான பொருட்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும்.

–  முடியின் மென்மைத்தன்மையை அதிகரிப்பதற்கு, தலைக்கு குளித்து முடித்து இறுதியில் 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, தலைக்கு ஊற்றினால், முடி வறட்சியின்றி பட்டுப்போன்று இருக்கும்.

– தலைக்கு குளித்தால், முடியை உலர வைப்பதற்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தக்கூடாது. இதனால் முடி உதிர்தல் தான் ஏற்படும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையாக உலர வைத்தால், முடியில் உள்ள இயற்கையான ஈரப்பசையானது முடியை வறட்சியடையச் செய்யாமல் பாதுகாக்கும்.

Related posts

தலைமுடி நரைப்பதைத் தடுக்க முடியும்..

nathan

மழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பு அவசியம்

nathan

முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா?

nathan

கூந்தல் சந்தேகங்கள்…

nathan

முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

nathan

இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்

nathan

பாட்டி வைத்திய முறையை பயன்படுத்தலாம் வாங்க! இளநரை மற்றும் செம்பட்டையிலிருந்து முடி கருப்பாக மாற வேண்டுமா?

nathan

முடி உதிர்வை அதிகரிக்கும் உணவுகள் – உஷார் ஆண்களே!!

nathan

பலவீனமான முடியை வலிமையாக்க உதவும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

nathan