27.8 C
Chennai
Saturday, Oct 19, 2024
zK9PsHL
மருத்துவ குறிப்பு

சிப்பிக் காளான் வளர்ப்பு

சிப்பிக் காளான் வளர்ப்பை தொழிலாகச் செய்ய ஆர்வம். அது லாபகரமானதா? எவ்வளவு முதலீடு தேவைப்படும்?

காளான் விற்பனையாளர் சஞ்சீவ்

சிப்பிக் காளான் உற்பத்தி செய்து விற்பது மிகச் சுலபமானது. சென்னை போன்ற இடத்து வெயிலைத் தாங்கி வளரக்கூடியது. சிப்பிக் காளான் சுவையிலும் நன்றாக இருக்கும். ஆனாலும், அதைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் போதுமானதாக இல்லை. சிப்பிக் காளான் உற்பத்தி செய்ய 15க்கு 20 அளவுள்ள டென்ட் வேண்டும். அதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். அது போக மண், விதை போன்றவற்றுக்கும், மாத சுழற்சிக்கும் 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படும்.

சிப்பிக் காளான் வளர்ப்பை கெமிக்கல் முறை, ஆர்கானிக் முறை என இரண்டு வழிகளில் செய்யலாம். ஒரு கிலோ உற்பத்திக்கான செலவு 50 ரூபாய் மட்டுமே. ஆனால், அதை ஸ்டார் ஹோட்டல்களில் கிலோ 200 ரூபாய் வரை வாங்கிக் கொள்வார்கள். தினமும் விளைச்சல் இருக்கும்.

ஒரு பையில் 600 கிராம் அளவு பயிரிடலாம். அப்படிப் பார்த்தால் நாளொன்றுக்கு 20 பைகள் வரை உற்பத்தி செய்ய முடியும். ஆர்கானிக் முறை உற்பத்தியில் நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் தகுந்த பயிற்சியுடனும் கவனத்துடனும் செய்ய வேண்டும்.zK9PsHL

Related posts

தெரிஞ்சிக்கங்க…வெள்ளையான பற்களை மஞ்சளாக மாற்றும் உணவுப் பொருட்கள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? பற்களை வெண்மையாக்க சில வழிமுறைகள்

nathan

இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

nathan

நீர்ச்சத்து குறைவும்… பாத வெடிப்பும்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரத்த சோகை

nathan

தெரிஞ்சிக்கங்க…பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி?

nathan

படுக்கைக்கு அருகிலேயே செல்போனை வைத்து கொள்பவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

குரலில் மாற்றமா? கவனம் தேவை

nathan