அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் வேதியல் பொருட்கள் நிறைந்த உணவுகளாலும், முறை தவறிய உணவுப் பழக்கங்களாலும் சீக்கிரமே உடல் பருமன் அடைந்துவிடுவார்கள். அதனால் சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைந்து விடுகிறார்கள். பரம்பரை காரணமாகவும், உடல் மன ரீதியாக எதாவது பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் சிறுவயதிலேயே பூப்படைந்துவிடுவார்கள்.அதுமட்டுமல்ல, இயல்பாகவே பருவம் அடையும் வயது இப்போது குறைந்துவிட்டது. அதனால், இதுபற்றி கவலைப்படவேண்டிய தேவையில்லை. ஆனால், மனதளவில் குழந்தைக்கு பயம் ஏற்படாத அளவுக்கு மாதவிடாய் பற்றி தாய் எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளியில் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு இதுபற்றிய கல்வியை புகட்டவேண்டும்.பருவம் வந்த பெண்களுக்கு ஓரளவு கொழுப்புச் சத்து, அதிகமான புரதச் சத்து தேவைப்படுகிறது. கருப்பை வளர்ச்சிக்கு கொழுப்பும் புரதமும் மிகவும் அவசியம். அதனால்தான் நம்முடைய முன்னோர் பெண் குழந்தைகள் பூப்படைந்ததும் கொழுப்பு, புரதம் உள்ள உளுந்து கஞ்சி, உளுந்து களி செய்து கொடுத்தார்கள். முட்டை கொடுத்து பிறகு நல்லெண்ணெய் உட்கொள்ள வைத்தார்கள்.
பெண்கள் பருவம் அடைந்த காலங்களில் மேற்கண்ட உணவுகளை கொடுத்து வருவதே உடல் ரீதியாக அவர்களுக்கேற்ற சிறந்த மருத்துவம் ஆகும்.