ன்னென்ன தேவை?
பால் – 1 லிட்டர்,
ஏலக்காய்த்தூள் அல்லது எசென்ஸ் – சிறிது (விருப்பப்பட்டது),
Whey water – தேவையான அளவு (வீட்டிலேயே செய்யும் பனீரிலிருந்து பிரித்தெடுத்த தண்ணீர். மிகப் புளிப்பாக இருக்க வேண்டும்),
பொடித்த சர்க்கரை – பிரித்தெடுத்த பனீருக்கு சமமான அளவு.
எப்படிச் செய்வது?
பாலைக் கொதிக்க வைத்து, புளித்த Whey water போட்டுத் திரிக்கவும். பின் ஒரு துணியில் வடிகட்டி, இந்தப் பனீரையும் பொடித்த சர்க்கரையையும் போட்டுக் கைவிடாமல் நுரைக்க அடித்து பின், ஏலக்காய்த்தூள் அல்லது விருப்பப்பட்ட எசென்ஸ் கலந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் கெட்டியான பின் சதுரமாகவோ, பூ வடிவிலோ வெட்டி, நடுவில் குங்குமப்பூ அல்லது பழத்துண்டுகள் போட்டு சாண்ட்விச் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து சுமார் 2, 3 மணி நேரம் கழித்து பரிமாறவும்.
Whey water செய்யும் முறை…
பாலைக் கொதிக்க விட்டு,
1 லிட்டர் பால் என்றால்,
தயிர் – 1 கப்,
குளிர்ந்த பால் – 1/4 கப்,
எலுமிச்சைச்சாறு – 2 சொட்டு விட்டுக் கொதிக்க விட்டுப் பின் பனீரை வடிகட்டி, சப்ஜி செய்ய உபயோகிக்கலாம். வடிகட்டின நீரே Whey water ஆகும். இதைப் புளிக்க வைக்கவும்.