32.8 C
Chennai
Monday, Sep 30, 2024
201605090745065636 how to make rich in nutrients Spinach rice SECVPF
சைவம்

சத்துக்கள் நிறைந்த கீரை சாதம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

அரிசி – 1 கப்
கீரை (ஏதாவது ஒரு வகை) – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு பற்கள் – 4
பச்சை மிளகாய் – 2
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு
வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை :

* சாதத்தை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.

* கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

* பூண்டை நசுக்கி கொள்ளவும் அல்லது பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, சேர்த்து சற்று சிவக்க வறுக்கவும்.

* பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.

* பின்னர் அதில் கீரையைச் சேர்த்து வதக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. கீரையிலுள்ள நீர்ச்சத்தே போதுமானது.

* அடுப்பை சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விட்டு, கீரை நன்றாக சுண்டும் வரை வதக்கவும். கடைசியில், வடித்த சாதத்தைக் கொட்டிக் கிளறி 3 நிமிடம் மூடி வைத்து இறக்கவும்.

* சுவையான சத்தான கீரை சாதம் ரெடி.201605090745065636 how to make rich in nutrients Spinach rice SECVPF

Related posts

சத்தான சுவையான அரைக்கீரை குழம்பு

nathan

காளான் டிக்கா

nathan

சப்பாத்தி உப்புமா

nathan

மீல்மேக்கர் சோயா குழம்பு

nathan

சிம்பிளான… பன்னீர் குருமா

nathan

கத்தரிக்காய் மசியல் : செய்முறைகளுடன்…!

nathan

சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி

nathan

பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

சூப்பரான சைடு டிஷ் கார்ன் மஷ்ரூம் மசாலா

nathan