தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு…
* பட்டை – 2 இன்ச்
* மிளகு – 1 டீஸ்பூன்
* மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* கசகசா – 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் – 10
* கொப்பறை தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்
சிக்கனுக்கு…
* சிக்கன் துண்டுகள் – 1 கப்
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 1
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை – ஒரு கையளவு
* கொத்தமல்லி – சிறிது
* தண்ணீர் – 1 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நீர் ஊற்றி கழுவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு நாண்-ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, மிளகு, மல்லி, சோம்பு மற்றும் கசகசாவை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து, அத்துடன் வரமிளகாய் மற்றும் கொப்பறை தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நீர் சிறிது ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவிய சிக்கன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, சிக்கன் வெள்ளையாக நிறம் மாறும் போது, அதல் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து எண்ணெய் தனியாக பிரிய ஆரம்பிக்கும் போது, உங்களுக்கு கிரேவி போன்று வேண்டுமானால், சிறிது நீர் ஊற்றிக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அதன் மேல் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், கொங்குநாடு சிக்கன் ப்ரை தயார்.