குழந்தை பிறந்தவுடன், எப்படிக் குழந்தையைத் தூக்குவது, குளிப்பாட்டுவது, பராமரிப்பது, மசாஜ் செய்வது போன்ற பயிற்சிகள் தரப்படும்.
பொதுவாகக் குழந்தையை பெரியவர்கள்தான் குளிப்பாட்டுவார்கள். இது தேவையே இல்லை. குழந்தையின் தாயோ, தந்தையோ குழந்தைகளைக் குளிப்பாட்டுவதே சரி. இதனால், குழந்தைக்கும் பெற்றோருக்குமான நெருக்கமும் அரவணைப்பும் உருவாகும்.
பிறந்தது முதல் 1 மாதம் வரை குழந்தைக்கு கறுப்பு, வெள்ளை மட்டுமே தெரியும். ஆதலால் ஃப்ளாஷ் கார்டுள் காண்பிப்பதன் மூலம், குழந்தைகளுக்கு நிறங்களை அறிமுகப்படுத்த முடியும். டி.வி, லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றைக் காண்பிப்பதைத் தவிர்க்கலாம். அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள், குழந்தையின் கண்களைப் பாதிக்கும்.
கருவானது முதல் பிறந்த மூன்று மாதம் வரை தேவையான அனைத்து ஆலோசனைகளும், குறிப்புகளும் தரப்படுவதால் குழந்தைகள் நல்ல மனநிலையுடன் ஆரோக்கியமாக பிறந்து, வளரும். மகிழ்ச்சியாக இருக்கும் தாயே நல்ல உணர்வுகள் நிறைந்த ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.