அசைவ வகைகள்அறுசுவை

கேரளா மீன் குழம்பு

sl1329
கேரளா மீன் குழம்பு தேவையான பொருட்கள்
நெத்திலி மீன்                                             – கால் கிலோ
வெங்காயம்                                                – 1 (பொடியாக வெட்டவும்)
தக்காளி                                                        – 3 (பொடியாக வெட்டவும்)
புளி                                                                 – 50 கிராம்
மிளகாய்த் தூள்                                         – 2 டீஸ்பூன்
தனியாத் தூள்                                            – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                                               – கால் டீஸ்பூன்
கடுகு                                                              – அரை டீஸ்பூன்
வெந்தயம்                                                   – அரை டீஸ்பூன்
தேங்காய்                                                     – அரை மூடி (அரைக்கவும்)
தேங்காய் எண்ணெய்                             – 50 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி           – தேவைக்கேற்ப

கேரளா மீன் குழம்பு செய்முறை

நெத்திலி மீனை சுத்தம் செய்து வைக்கவும். தேங்காயை அரைக்கவும். புளியை கரைத்து அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு கரைக்கவும். பிறகு உப்பு, அரைத்த தேங்காயும் போட்டு கரைத்து வைக்கவும். தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய பிறகு கரைத்து வைத்து இருக்கும் குழம்பை ஊற்றி கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு மூடி விடவும். குழம்பு நன்றாக கொதித்த பிறகு தீயை குறைத்து வைக்கவும். எண்ணெய் கசிந்து மேலே வந்த பிறகு தீயை தூண்டி மீனை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். மீன் வெந்த பிறகு இறக்கி விடவும்.

Related posts

ஜலதோஷத்தை விரட்டும் பெப்பர் சிக்கன்

nathan

சைவக் கேக் (Vegetarian Cake)

nathan

பைனாபிள் – செர்ரி ஜஸ்க்ரீம்

nathan

ஆட்டுக்கால் பாயா | attukal paya

nathan

வாழைக்காய் பஜ்ஜி

nathan

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

nathan

சுவையான மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா

nathan

ருசியான முட்டை சப்பாத்தி எப்படி செய்வது?…

sangika

சிக்கன் பிரியாணி செய்முறை..

nathan