27.5 C
Chennai
Saturday, Sep 28, 2024
be
ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்குபெண்கள் மருத்துவம்

குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?

அலர்ஜி என்ற வார்த்தையை நான் சொன்னால், உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், பொதுவாக நம் நினைவிற்கு வரும். வெறும், 5 -10 சதவீதம் மட்டுமே தோலில் தடிப்பாக தோன்றும். அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று அலர்ஜி பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம்.குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது.

be

தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற துவங்கும், ஆறு மாதங்களில் இருந்து, உணவு அலர்ஜி வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.

எப்படி கண்டுபிடிப்பது?

ஒரு குழந்தைக்கு, பால் அலர்ஜி என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் அலர்ஜிக்கான அறிகுறிகள் வர வேண்டும்.
அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், இன்று அலர்ஜிக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்னை இல்லை. வேறு காரணங்கள் இருக்கலாம்.

குறிப்பிட்ட உணவால் அலர்ஜி என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அலர்ஜி வர வேண்டும்.

பால், முட்டை, நட்ஸ் ஆகிய வற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது பொதுவான விஷயம். கோதுமை சாப்பிடுவதால், மிக அபூர்வமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி வருகிறது. உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

ஒரு சில ஆண்டு களில் பால், முட்டை அலர்ஜி ஏற்படுத்துவது மாறி விடும். ஆனால், ‘நட்ஸ்’ சாப்பிடுவதை வாழ்க்கை முழுதும் தவிர்க்க வேண்டியிருக்கும்.
குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்னை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே, எந்த உணவால் அலர்ஜி என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.

இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர்.

இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்னை இது.
வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில், வளர்ப்பு பிராணிகளின் உரோமத்தினால், கரப்பான் பூச்சி யால் வரும் அலர்ஜி. இப்படி இருந்தால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில், எப்போதும், ரணம் இருந்து கொண்டே இருக்கும். ‘ஏசி’ அறைக்கு வந்தவுடன் அதிகமாக, தும்மல், மூக்கடைப்பு வரும்.
வெளியில் செல்லும் நேரங்களில், துணியால் முகத்தில் கட்டிக் கொள்வது, வெளியில் இருக்கும் மாசிலிருந்து பாதுகாக்குமே தவிர, வீட்டில் நிரந்தரமாக உள்ள பிரச்னையில் இருந்து காக்க உதவாது. இதை பரிசோதித்துஅறியவும் வசதிகள் உள்ளன.

Related posts

குழ‌ப்ப‌ங்களு‌க்கு ‌தீ‌ர்வு கா‌ண்பது எ‌ளிதா‌க இத செய்யுங்கள்!….

sangika

அழுக்குகளைப் போக்க பிராணாயாமத்தின் மூன்று நிலைகள்!…

nathan

நீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா?

nathan

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி

nathan

டலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரண மாகி விடும். காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்!!

nathan

கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதற்கு தெரியுமா?

sangika

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்க இதை செய்யுங்கள்!….

sangika

பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க தாய்க்கு அறிவுரை

nathan

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக கலவை சிறந்ததாக இருக்கும்!…

sangika