குளிர்காலத்தில் உதடுகள் எளிதில் ஈரத்தன்மையை இழந்துவிடும். மேலும் சிலருக்கு வெடித்து, ரத்தக் கசிவு கூட ஏற்படும்.
உதடு எரிச்சல், சிவந்து போதல் என குளிர்காலத்தில் உதடுகளில் பாதிப்பு ஏற்படும். என்னதான் லிப் பாம் போட்டாலும் மீண்டும் மீண்டும் எரிச்சல் ஏற்படும்.
இந்த பிரச்சனையை எளிதில் வீட்டிலேயே சரிபண்ணலாம். நீங்களே உதட்டிற்கு ஈரப்பதம் அளிக்கக் கூடிய ஸ்க்ரப் தயாரிக்கலாம். இவை குளிரினால் உதட்டில் உண்டாகும் கருமையை மறையச் செய்து, வலி இல்லாமல் வைத்திருக உதவும். எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம்.
தேவையானவை : பொடி செய்த சர்க்கரை -1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி – கால் கப் பட்டைபொடி – 1 ஸ்பூன்
பட்டையை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். பெட்ரோலியம் ஜெல்லியில் சர்க்கரை, ஆலிவ் எண்ணெய், பட்டைப் பொடியை கலந்து ஒரு இறுக்கமான டப்பியில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் அதனை உதட்டில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து, கழுவவும். தினமும் இப்படி செய்தால், ஈரப்பதம் குறையாது. இறந்த செல்கள் வெளியேறி, உதடு சிவப்பாகும்.