கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு
தேவையான பொருட்கள் :
மொச்சை – 1 கையளவு
கருவாடு – 100 கிராம்
கத்தரிக்காய் – 1/4 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 100 கிராம்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
கறிவேப்பிலை – 2 கொத்து
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/2 குழிக்கரண்டி
புளி – எலுமிச்சம் பழ அளவு
கடுகு – தாளிக்க
செய்முறை :
* மொச்சையை வேக வைத்துக் கொள்ளவும்.
* கருவாட்டை மண் போக நன்கு அலசிக் கொள்ளவும்.
* புளியை கரைத்து கொள்ளவும்.
* கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
* புளியை கரைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை போட்டு நன்றாக வதக்கியதும் தனியாத்தூள், மஞ்சள்தூள், அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி கத்தரிக்காய், மொச்சை சேர்த்து வேக வைக்கவும்.
* காய் வெந்ததும், புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
* நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் அதில் கருவாட்டை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
* உப்பை சரி பார்த்து குழம்பு கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.
* இப்போது மணக்க மணக்க மொச்சை கருவாட்டு குழம்பு ரெடி.
* கருவாட்டு குழம்பை மண்சட்டியில் வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும். உங்களுக்கு பிடித்த எந்த கருவாட்டையும் பயன்படுத்தி சமைக்கலாம்.