27.2 C
Chennai
Monday, Dec 16, 2024
அசைவ வகைகள்

கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்பு

பச்சை மொச்சையில் அதிகளவும் சத்துக்கள் உள்ளது. கிராமங்களில் பச்சை மொச்சை குழம்பு மிகவும் பிரபலம். இன்று பச்சை மொச்சை குழம்பு செய்முறையை பார்க்கலாம்.

கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்பு
தேவையான பொருட்கள்

பச்சை மொச்சை – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 3
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் துருவல் – அரை கப்
குழம்பு மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுந்து – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு, பச்சை மிளகாயுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

* தக்காளி நன்றாக குழைந்ததும் அதில் அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். உப்பு சரிபார்த்து கொள்ளவும்.

* குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும்.

* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்திற்கு வந்த உடன் இறக்கவிடவும்.

* சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி.

* சூடான சாதத்திற்கோ, இட்லிக்கோ ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்.201705191525178736 pachai mochai kulambu SECVPF

Related posts

கடாய் பன்னீர் கிரேவி

nathan

சில்லி சீஸ் டோஸ்ட்

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika

ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்

nathan

ருசியான… பன்னீர் 65

nathan

சுவையான…. மட்டன் சுக்கா

nathan

மசாலா ஆம்லெட்

nathan

நண்டு பிரியாணி.! செய்வது எப்படி.!

nathan

வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி

nathan