நீங்கள் கருவுற்ற ஆரம்ப காலத்தில் இருந்தே நிறைய அறிவுரைகள் கூறப்படும். ரொம்ப கவனமாக பாதுகாப்பாக இருக்க வேண்டிய கால கட்டமும் கூட.
அடுக்கடி பயணம் செய்வது, மாடிப்படி ஏறுவது, கனமான பொருட்களை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்குவார்கள். அதில் ஒன்று தான் பாத் டப்பில் சுடுநீரில் குளிப்பது கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதும் மருத்துவர்கள் தருகிற எச்சரிக்கை.
சூடான குளியல்
இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்னவென்றால் முதல் மூன்று மாதங்களில் இப்படி சுடுநீரில் குளிப்பது குழந்தைக்கு நரம்பு மண்டல குறைபாடுகளை ஏற்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அதே மாதிரி சுடுநீரில் குளிக்கும் போது நமது உடல் வெம்பநிலையும் மாறுபடுகிறது. இந்த பிரச்சினைக்கு மத்தியில் தற்போதைய ஆராய்ச்சி தகவல்கள் படி சுடுநீரில் குளிப்பதால் கருச்சிதைவு ஏற்படுகிறது என்ற ஆச்சர்யமூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மருத்துவர் அறிவுரை
அதனால் மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடல் வெப்பநிலையை 101 டிகிரி F க்கு அதிகமாக போகாது படி பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வெறும் 20 நிமிடங்கள் சூடான பாத் டப்பில் உட்கார்ந்து இருந்தாலே உங்கள் உடல் வெப்பநிலை 102 டிகிரி F க்கு சென்று விடும் அபாயம் உள்ளது என்கின்றனர்.
சூடான குளியலால் கருச்சிதைவு
2030 ஆம் ஆண்டில் நடத்திய ஒரு ஆய்வுப் படி சூடான நீரில் டப் குளியல் என்பது கருச்சிதைவை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது என்று கூறுகிறது. அதிலும் நீங்கள் கர்ப்பமான முதல் மூன்று மாதங்கள் இந்த மாதிரியான குளியலை மேற்கொள்ளும் கருச்சிதைவு ஏற்பட இரண்டு மடங்கு வாய்ப்புள்ளது.
அமெரிக்க கர்ப்பிணி பெண்களுக்கான சங்கம் கூறுவது என்னவென்றால் கண்டிப்பாக கர்ப்பிணி பெண்களின் உடல் வெப்பநிலை 101 டிகிரி F க்கு மேல் செல்லவே கூடாது என்று அறிவுறுத்துகிறது.
தவிர்க்க என்ன செய்ய வேண்டும்
நீங்கள் சூடான நீரில் குளியல் போட நினைத்தால் நீரின் சூட்டை லேசாக வைத்து கொள்வது நல்லது. மேலும் 10 நிமிடங்களுக்கு மேல் அதில் குளிக்க வேண்டாம். அடிக்கடி இப்படி குளிப்பதை தவிர்க்கவும்.
அபாயம்
2003 ஆம் ஆண்டில் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடமயாலஜி வெளியிட்ட ஒரு ஆய்வின் படி, சூடான பாத் எடுக்கும் கர்ப்பிணி பெண்களையும், சாதாரண நீரில் குளிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் இடையில் ஒரு ஆய்வு நடத்தினர். இதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் சூடான நீரில் பாத் டப் பயன்படுத்தியவர்களுக்கு இரண்டு மடங்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அடிக்கடி சூடான குளியல் செய்பவர்களுக்கு கருச்சிதைவு அபாயம் அதிகரிப்பதும் தெரிய வந்துள்ளது.
எந்த மாதத்தில் இப்படி நடக்கும்
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் குழந்தையின் உறுப்புகள் எதுவும் வளர்ச்சி அடைந்து இருக்காது. கர்ப்பத்தில் உள்ள குழந்தை முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில் சூடான குளியல் எடுக்கும் போது கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. எனவே முதல் மூன்று மாதங்கள் சூடான குளியலை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் 100 டிகிரி க்கு மேல் வெப்பநிலை கூடாமல் எடுத்துக் கொள்ளுங்கள். சுடு நீர் குளியல் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பதாக இருக்க கூடாது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் அளவிற்கு இருந்தால் போதும்.
முதல் மூன்று மாதங்களில் குழந்தையின் உடலுறுப்புகள் வளர்ச்சி அடையாத சமயத்தில் அதிகப்படியான வெப்பநிலையை செலுத்துவது குழந்தைக்கு பிறப்பு குறைபாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே கர்ப்பிணி பெண்கள் அதிகப்படியான வெப்பநிலையில் சுடுநீர் குளியல் வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பிறப்பு குறைபாடு
நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட அறிக்கையில் இந்த பாத் டப் சுடுநீர் குளியல் கருவில் வளரும் குழந்தைக்கு 2-3 தடவைக்கு அதிகமாக பிறப்பு குறைபாட்டை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
மருத்துவர்களும் அதிகப்படியான வெப்பநிலை கருவில் வளரும் குழந்தைக்கு செல்லுமுன் போது 6.22 மடங்கு பிறப்பு குறைபாடு ஏற்பட்டு குழந்தை பாதிப்படையக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எச்சரிக்கை நடவடிக்கைகள்
சூடான நீர் கொண்ட டப்பில் உட்கார்ந்து குளிப்பதை விட லேசான சூடான நீரை உடம்பின் மேல் ஊற்றிக் குளிப்பது சிறந்தது. ஏனெனில் இந்த முறையில் நமது உடல் சூடான நீரில் மூழ்குவதில்லை. இருப்பினும் நீரை அதிக சூட்டில் பயன்படுத்துவதை தவிருங்கள். அடிக்கடி உங்கள் உடல் வெப்பநிலையை பரிசோதித்து கொள்ளுங்கள். நீண்ட நேரம் சூடான நீரில் குளிக்க வேண்டாம்.