உதடுகள் எளிதில் கருப்பாகிவிடும் தன்மை கொண்டது. சருமத்தின் மேல் மெல்லிய படலம் உள்ளது. அது வெய்யிலிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாக்கும். அந்த படலம் உதட்டில் இல்லை. இதனால் உதட்டில் எச்சில்படும்போதும், வெயில் படும்போதும் எளிதில் கருமையாகிவிடும்.
அது தவிர்த்து, உதட்டில் போடும் லிப்ஸ்டிக் உதட்டிற்கு தகுந்த ஈரப்பதம் அளித்தாலும், அதில் சேர்க்கப்படும் கெமிக்கல் விளைவுகளை ஏற்படுத்தும். கருமையடைந்து வறண்டு வெடித்த உதடுகளாக மாறும்.
இதனை எப்படி சரி செய்யலாம்? உதடுகளை நாள்தோறும் ஸ்க்ரப் செய்து, தகுந்த லிப் பாம் தடவி வந்தாலே அழகான உதடுகளைப் பெறலாம். அவற்றை ஏன் கடையில் வாங்க வேண்டும். அவைகளை என்ன இயற்கையாகவா தயாரித்திருப்பார்கள். அவற்றில் கெட்டுப்போகாமலிருக்க பராபின் சேர்ப்பார்கள். இவை உதட்டில் கருமையை உண்டாக்கும்.
வீட்டிலிருந்தபடியே இயற்கையான பொருட்களைக் கொண்டே உங்கள் கருமையான உதடுகளை சிவப்பாக்கலாம். எந்த பக்கவிளைவுகளையும் தராது. உதட்டிற்கு ஈரப்பதம் அளித்து, கருமையை ஒரு சில வாரங்களுக்குள் போக்கிவிடும். எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப் : தேவையானவை : தேங்காய் எண்ணெய் – 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன் தேன் – அரை ஸ்பூன் சர்க்கரை – 1 டீ ஸ்பூன்
தேங்காய் எண்ணெயில் எலுமிசை சாறு மற்றும் சர்க்கரையை கலக்குங்கள். நன்றாக கலந்ததும் அதனைக் கொண்டு, உதட்டில் தேயுங்கள். தினமும் செய்யலாம் அல்லது வாரம் 3 முறை செய்யலாம். ஒரே வாரத்தில் மிருதுவான உதடு கிடைக்கும்.
கோகோ பட்டர் லிப் பாம் : இதனை உதட்டிற்கு போடும் லிப் பாமாக உபயோகபப்டுத்தலாம். இவை வெய்யிலினால் உண்டாகும் கருமையை தடுக்கிறது. ஈரப்பதம் அளிக்கும். சிவப்பான உதடுகள் பெறலாம்.
தேவையானவை : நாட்டுச் சர்க்கரை – 2 டீ ஸ்பூன் வெள்ளை சர்க்கரை – 1 டீ ஸ்பூன் கோகோ பட்டர் – அரை டீ ஸ்பூன் தேன் -1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் – 2-3 துளிகள்
தேன், பாதாம் எண்ணெய் மற்றும் கோகோ பட்டரை முதலில் கலந்து கொள்ளுங்கள். பிறகு அதில் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெள்ளைச் சர்க்கரையை கலக்கவும் ஒரு 10 நொடிகள் கலந்துவிட்டு, பின்னர் உதட்டில் தடவுங்கள்.
மெதுவாக மசாஜ் செய்யவும். இதனை மெதுவாக பருத்தித் துணியால் ஒத்தி எடுக்கவும். அதனை லிப் பாமாக போட்டுக் கொண்டாலும் நல்லது. குறிப்பாக கோகோ பட்டரை மட்டுமே உபயோகப்படுத்துங்கள். கோகோ கலந்த க்ரீம் இதில் உபயோகப்படுத்த வேண்டாம். தினமும் போட்டுக் கொள்ளலாம். உதடுகள் அழகு பெறும்.