24.5 C
Chennai
Tuesday, Dec 17, 2024
c 22 1513947084
முகப் பராமரிப்பு

கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை சூப்பர் 15 குறிப்புகள்!

முகம் என்ன தான் பளிச்சென்று இருந்தாலும் கூட கண்களுக்கு கீழே இருக்கும் இந்த கருவளையங்கள் முகத்தின் அழகையே கெடுப்பதாக அமையும். அதுவும் சற்று நிறமாக உள்ள பெண்களுக்கு இந்த கருவளைய பிரச்சனை பெரும் தொல்லையாக இருக்கும். உங்களது கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்களை போக்க நினைக்கும் முன்னர், இந்த கருவளையங்கள் எதனால் வருகிறது என்பது பற்றிய காரணத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சிலருக்கு உடல் ஆரோக்கியம் குறைவாக இருப்பதன் காரணமாகவும் இது போன்று கருவளையங்கள் தோன்றும்.. உங்கள் உடல் நலத்தையும் சரியாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த கருவளைய பிரச்சனையை மிகவும் எளிதான முறையில் போக்க இந்த பகுதியில் சில வீட்டு வைத்தியங்களை காணலாம். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நீங்கள் சீக்கிரமாக கருவளையங்கள் இல்லாத அழகு முகத்தை பெறலாம்.

தண்ணீர் பற்றாக்குறை உங்களது உடலில் இருக்கும் கழிவுகளை சீரான முறையில் வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த நச்சுக்களை வெளியேற்ற தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். தினமும் 10 டம்ளர் தண்ணீராவது கண்டிப்பாக குடிக்க வேண்டியது அவசியமாகும்.

ஹீமோகுளோபின் அளவு உங்களுக்கு கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், நீங்கள் உங்களது ஹீமோகுளோபின் அளவை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாகவும் இது போன்ற கருவளையங்கள் உண்டாகலாம்.

தூக்கமின்மை சரியாக தூங்கமால் இருப்பது இரவு நீண்ட நேரம் செல்போன், கணினி, டிவி போன்றவற்றை பார்த்துக் கொண்டு இருப்பது போன்றவை உங்களது கண்களுக்கு சோர்வை தரும். தூக்கமின்மையும் கூட கருவளையம் வருவதற்கு காரணமாக அமையும்.

மேலும் சில காரணங்கள் கண்ட உணவுகளை எல்லாம் சாப்பிடுவது, மன அழுத்தம், மன வேதனை, நீண்ட நாட்கள் உடல் நலக் கோளாறால் அவதிப்பட்டிருப்பது போன்ற காரணங்களும் கூட கண்களுக்கு கிழே கருவளையம் வரலாம்.

மசாஜ் நீங்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து, மிருதுவாக உங்களுக்கு கண்களுக்கு கீழே மசாஜ் செய்ய வேண்டும். இதனை தூங்க போவதற்கு 1 மணி நேரம் முன்னதாக செய்யுங்கள்

கண்களுக்கான பேக் கண்களுக்கு பேக் போடுவதற்கு, பிரஷ் ஆன தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். சில துளிகள் எலுமிச்சை சாறையும் எடுத்துக் கொள்ளுங்கள், 2 டேபிள் ஸ்பூன் அளவு வெள்ளரிக்காய் பேஸ்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். களிமண் முகத்திற்கு பயன்படுத்துவதற்காகவே கடைகளில் கிடைக்கும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள்.. கண்களை பஞ்சை வைத்து முடிவிட்டு, இந்த பேஸ்டை எடுத்து பஞ்சின் மீது மாஸ்க் போன்று போடுங்கள். இது குளிர்ச்சியாக இருக்கும். இந்த மாஸ்கை 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர் பால் அல்லது தண்ணீர் கொண்டு கண்களை சுற்றியுள்ள பகுதிகளை துடைத்துக் கொள்ளலாம்.

தக்காளி பேக் தக்காளி ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து கண்களுக்கு தினசரி மாஸ்க் போட வேண்டும். இந்த மாஸ்கை 20 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் இளநீர் கொண்டு கழுவுங்கள்.. கருவளையங்கள் விரைவிலேயே மறைந்துவிடுவதை காணலாம்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை துருவி அதனை கொண்டு கண்களுக்கு அடியில் மசாஜ் செய்யலாம். அல்லது உருளைக்கிழங்கு சாறை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்ய வேண்டும்.

பாதாம் எண்ணெய் இரவு தூங்கும் முன்னர் பாதாம் எண்ணெய்யை கொண்டு உங்களுக்கு கருவளையங்கள் உள்ள இடங்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் இதனை அப்படியே விட்டுவிட்டு காலையில் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, அதனை கண்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனை 15 நிமிடங்கள் தினமும் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரை கொண்டு உங்களது கண்களை கழுவிக் கொள்ளுங்கள்.

தேன் ஆர்கானிக் தேனை கொண்டு உங்களது கண்களுக்கு அடியில் பேக் போல வேண்டும். இதனை 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளுங்கள். இந்த முறையை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டியது அவசியமாகும்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை நீரில் கலந்து கொள்ள வேண்டும். இரண்டு பஞ்சுகளை எடுத்துக் கொண்டு அதனை பேக்கிங் சோடா நீரில் நனைத்து கண்களுக்கு மேல் வைத்துவிட வேண்டும். 10-15 நிமிடங்கள் கழித்து இதனை ரிமூவ் செய்து விட்டு, கண்களை சுத்தமான நீரினால் கழுவி விட வேண்டும்.

குங்குமாதி தைலம் குங்குமாதி தைலத்தை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதனை கண்களுக்கு அடியில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். சில நிமிடங்கள் இதனை அப்படியே விட்டுவிட வேண்டும். பின் குளிர்ந்த நீரை கொண்டு கண்களை கழுவிக் கொள்ளுங்கள். இந்த முறையை தினமும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு சில துளிகள் எலுமிச்சை சாறை எடுத்துக் கொண்டு அதனை பஞ்சில் நனைத்து கண்களுக்கு கீழே உள்ள பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். எலுமிச்சையை கண்களுக்கு அடியில் தடவும் போது கவனம் தேவை.. இதனை 10 நிமிடங்கள் வைத்துவிட்டு பின்னர் கழுவி விட வேண்டும்.

புதினா இலைகள் புதினா இலைகளில் இருந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறை கண்களுக்கு அடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அதனை 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் விரைவில் கருவளையங்கள் நீங்கும்.

பெட்ரோலியம் ஜெல்லி பெட்ரோலியம் ஜெல்லியை சில துளிகள் எலுமிச்சை சாறுடன் கலந்து கண்களுக்கு கீழே பேக் போல வேண்டும். இதனை ஒரு மணிநேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒரு பஞ்சை எடுத்து அந்த பெட்ரோலியம் ஜெல்லியை ரிமூவ் செய்து விட்டு, குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.

குங்குமப்பூ கால் கப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்ச நேரம் 2 அல்லது 3 குங்குமப்பூக்களை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்னர் இந்த பாலை காட்டனில் நனைத்து கண்களுக்கு கீழே மசாஜ் செய்து, பேக் மாதிரி போட வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து இதனை கழுவி விட வேண்டும்.

மஞ்சள் மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மஞ்சள் சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை, பாதாம் எண்ணெய்யுடன் கலந்து கண்களுக்கு கீழே பேக் போல போட வேண்டும். இதனை 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

c 22 1513947084

Related posts

உங்களுக்கு தெரியுமா வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே லிப் ஸ்க்ரப் தயாரிக்கலாம்!

nathan

கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பிரகாசமாக்கும் அழகு குறிப்புகள்…!!

nathan

ரோசாசியா என்றால் என்ன?

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கொரியா, தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பேபி ஃபேஸ் மேக்கப் போடுவது எப்படி தெரியுமா?

nathan

உலகளவில் அழகுப்படுத்திக்க செய்யப்படும் விசித்திர சிகிச்சை முறைகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கோடையில் பிம்பிள் வருவதைத் தடுக்க சில சிம்பிளான டிப்ஸ்…

nathan

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்!!!

nathan

உங்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் ஏற்பட கூடிய பருக்களை மறைய செய்யணுமா..?அப்ப இத படிங்க

nathan